புறநானூறு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாடல் - 1

கடவுள் வாழ்த்து


கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை

மறைநவி லந்தணர் நுவலவும் படுமே

பெண்ணுரு ஒருதிற நாகின் றவ்வுருத்

தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்

பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை

பதினெண் கணனு மேத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏம மாகிய

நீரற வறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே

              - பெருந்தேவனார்
"https://ta.wikibooks.org/w/index.php?title=புறநானூறு&oldid=15441" இருந்து மீள்விக்கப்பட்டது