உள்ளடக்கத்துக்குச் செல்

புலவி நுணுக்கம்

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்குறள் > கற்பியல்

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.


1312. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.


நாங்கள் கொண்ட ஊடலினால் பேசாமல் இருந்த பொழுது, "நீடு வாழ்க!" என்று நான் வாழ்த்துவேன் என்றெண்ணி, அவர் எனக்கு கேட்கும் படியாக தும்மினார்.


1313. கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.


1314. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.


இவ்வுலகில் எவரை விடவும், உன்னிடத்தில் மிக்க அன்பு கொன்டுள்ளேன் என்றேன். யாரை விட? யாரை விட? என்று பொய்யாக என்மீது கோபித்து கொண்டாள்.


1315. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.


இந்த பிறவியில் நாம் பிரிய மாட்டோம் என்றேன். மறு பிறப்பை நினைத்து, அவள், கண்களில் நீர் கொண்டாள்.


1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.


உன்னை நினைத்தேன் என்றேன். ஏன் முதலில் மறந்தீர்? என்று கேட்டு என்னுடன் ஊடினாள்.


1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.


நான் தும்மிய கணத்தில் என்னை வாழ்த்தியவள், யார் நினைத்தனால் நான் தும்மினேன் என்றென்னி, என்னுடன் கோபித்துக் கொண்டாள்.

1318. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.


1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.


1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.


"https://ta.wikibooks.org/w/index.php?title=புலவி_நுணுக்கம்&oldid=9739" இலிருந்து மீள்விக்கப்பட்டது