உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சிகள்/தேனீ

விக்கிநூல்கள் இலிருந்து

தேனீக்கள் விலங்கினங்களில் கணுக்காலிகள் தொகுதியினைச் சார்ந்தது. தேனீக்களை பொதுவாக சமூக பூச்சிகள் எனலாம். இவற்றில் வேலையினைப் பகிர்வதற்காக மூன்று பிரிவுகள் உள்ளன. அவைகள் இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ ஆகும். இராணித் தேனீ பெரியதாக காணப்படும். ஒரு கூட்டில் ஒரே ஒரு இராணித் தேனீ மட்டும்' காணப்படும். இவற்றின் பணி இனப்பெருக்கம், ஒரு இராணித் தேனீ ஒரே சமயத்தில் 2000 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்க காலத்தில் இவைகள் ஃபிராமோன் எனும் ஹார்மோனை வெளியிடும் இதனால் ஆண் தேனீக்கள் கவரப்பட்டு இரணித் தேனீயை தொடர்ந்து கூட்டமாகச் செல்லும் இந்நிகழ்விற்கு புணரும் பறத்தல் என்று பெயர். இவைகள் சுமாராக 3 முதல் 4 ஆண்டுகள் வரை வாழும். இவற்றில் கொட்டும் உறுப்பு உண்டு. ஆண் தேனீக்கள்: இவைகள் ஒரு கூட்டில் சுமார் 200 முதல் 300 வரை இருக்கும். இவற்றின் வேலை இனப்பெருக்கம் செய்தலாகும். இவைகள் இரணித்தேனீயைவிட சிறியதாகவும், வேலைக்காரத்தேனீயினை விட பெரியதாகாவும் இருக்கும். வேலைக்காரத்தேனீக்கள்; இவைகளே கூட்டில் அதிகமாக காணப்படும். இவற்றின் வேலை கூட்டினை பரமரித்தல், தேனை சேகரித்தல், வளரும் லார்வாக்களுக்கு உணவளித்தல், இராணித் தேனீயாக வளரும் லார்விற்கு சிறப்பு உணவான ராயல் ஜெல்லியினை தயாரித்தல், புதிய கூட்டினை கட்டுதல், தேன் மெழுகினை உற்பத்தி செய்தல் இதன் வேலையாகும்.

படிமம்:Kookherd.a. 8 كوخرد.jpg
"https://ta.wikibooks.org/w/index.php?title=பூச்சிகள்/தேனீ&oldid=12661" இலிருந்து மீள்விக்கப்பட்டது