பேச்சு:அறிவியல் விதிகள்
தலைப்பைச் சேர்இதிலுள்ள தமிழ் வழக்கிலில்லை. இதைப்படிப்பவர்களுக்கு ஒன்றும் புரியாது.
ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதுவது போல் இதற்கும் உரை எழுதினால் இப்பிரச்சினை தீர்ந்து விடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:18, 24 ஜூன் 2012 (UTC)
- நன்றி தென்காசி சுப்பிரமணியன். நிச்சயம் உரையும் சேர்த்தே எழுதுவோம். --இராஜ்குமார் (பேச்சு) 20:43, 24 ஜூன் 2012 (UTC)
நல்ல முயற்சி. ஆனால், கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்பு முயற்சிகளுக்கு விக்கிநூலில் இடம் உண்டா என்று ஐயம் உள்ளது. பாட நூல்கள், பயனர் கையேடுகள் போன்றவை இடம்பெறுவதே வழக்கம்--இரவி (பேச்சு) 05:08, 25 சூன் 2012 (UTC)--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:38, 25 சூன் 2012 (UTC)
- இது என் தனிப்பட்ட கவிதை அல்ல. இது நான் ஒருவன் மட்டும் உருவாக்க போவதில்லை. சொந்த உணர்ச்சிகளை, கருத்துக்களை எழுதப்போவதில்லை. நாம் அறிவியல் விதிகளை மொழிப்பெயர்த்து உரைநடையில் எழுதுவதை போல் குறளாக அழகுப் படுத்துகிறோம். நான் எழுதிய குறள் கடுந்தமிழில் இருந்தால் வேறொருவர் அதனை எளிமையாக செய்துவிடுவர். இது ஒரு கூட்டு முயற்சி. இதனால் பல அறிவியல் விதிகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றால் நன்று தானே. இதுவும் ஒரு அறிவியல் பாடநூல் அல்லவா? --இராஜ்குமார் (பேச்சு) 05:45, 25 சூன் 2012 (UTC)
கூட்டு முயற்சி தான். அறிவியல் பயனுடையது தான். ஆனால், தமிழ் இணையத்தில் உள்ள எண்ணற்ற தமிழ் வெண்பாமர்கள் இது போல் அனைத்துத் துறைகள் குறித்தும் எழுதப் புகுந்தால் தமிழ் விக்கிநூல்களின் கவனம் சிதறலாம். கருத்துகளை விடுத்து பாக்களின் இலக்கண விதிகளை ஆராய நேரம் போகலாம். படைப்பிலக்கிய வகையில் இம்முயற்சி நன்று. ஆனால், விரிவான விளக்கங்கள், படங்களுடன் கூடிய உரை நடை விளக்கமே மாணவர்களுக்குக் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--Ravidreams (பேச்சு) 06:59, 25 ஜூன் 2012 (UTC)
- நன்றி. நானும் அவ்வாறே எண்ணம் கொண்டுள்ளேன். ஒரு விதிகளுக்கும், குறள் மட்டும் இல்லை, விரிவுரை, இயக்கப் படங்கள், அறிவியல் விதிகள் தோன்றிய அல்லது உருவான விதம் முடிந்தால் அனைத்தையும் ஒருவிதிக்கு ஒருப்பக்கமென்று தொகுக்கலாம். --இராஜ்குமார் (பேச்சு) 07:12, 25 ஜூன் 2012 (UTC)
- ரவியின் கருத்துக்களும் ஏற்கக் கூடியதுதான் ஆயினும் விதிகளை குறட்பாக்களாக அமைப்பது இலகுவில் நினைவில் நிலநிறுத்தவும் உதவியாக இருக்கும் என்பது என்கருத்து--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:30, 25 ஜூன் 2012 (UTC)
தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்! நான் ஆங்கில வழியில் அறிவியல் படித்தேன், ஆயினும் இயல்பான தமிழ்நடையை நன்றாக படிப்பேன். எனக்குத் தெரிந்த சில அறிவியல் சார்ந்த தமிழ்ச் சொற்களின் உதவியுடன் உங்கள் குறள்பாக்களை படித்தேன். எனக்கே புரியும்படி உள்ளது. அப்படியெனில், அடிப்படையான அறிவியல் தமிழை அறிந்தவர்களுக்கும் புரியும். மிகவும் எளிமையாக உள்ளதால் கண்டிப்பாக பலருக்கும் இது உதவும். முயற்சியைத் தொடரவும். மென்மேலும் உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.--101.212.1.230 14:15, 9 ஜூலை 2012 (UTC)