பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா
தலைப்பைச் சேர்சப்த கன்னிமார் ஆலயம்
[தொகு]இந்த சப்த கன்னிமார் ஆலயம் சகலதோஷமும் நிவர்த்தி ஆகும் ஆலயம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பக்கத்தில் உள்ள வயலூர் செல்லும் வழியில் முள்ளிக்கரும்பூர் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஏழு கன்னிமார் மற்றும் ஓம்கார லிங்கேஸ்வரர் ஓம்கார தேவி ஆலயத்தில் காட்சி கொடுக்கின்றனர் இந்த ஆலயம் மிகப் பழமை வாய்ந்த ஆலயம் இந்த ஆலயத்தில் உள்ள கன்னிமார் 2000 வருடங்கள் பழமையான கன்னிமார் தெய்வங்கள் இந்த ஆலயம் சிறப்பு இந்த ஆலயத்தில் ராகு கேது உடன் விநாயகர் இருக்கிறார் இந்த ஆலயத்தில் திருக்கல்யாண முருகர் மற்றும் ஆகாசன பைரவர் சனீஸ்வரர் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வரலாம் மற்றும் ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அனுமார் ஆனவர் பெருமாளை பார்த்து வணங்கியபடி அமர்ந்துள்ளார் மற்றும் பிரம்மாவுக்கு தனி சன்னதி இந்த ஆலயத்தில் சன்னாசி சித்தர் அமர்ந்துள்ளார் மற்றும் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்கு இதுசிறப்பாகும். மற்றும் இந்த ஆலயத்தில் சிவன் மற்றும் நந்தி நாம் சுற்றிவர முடியும் நாட்டில் எந்த ஆலயத்திலும் இந்த சிறப்பு கிடையாது ஏழு முறை சுற்றினால் ஒரு பலன் ஒன்பது முறை சுற்றினால் பலன் 18 முறை சுற்றினால் ஒரு பலன் 27 முறை சுற்றினால் ஒரு பலன் 108 முறை சுற்றினால் ஒரு பலன் 1008 முறை சுற்றினால் ஒரு பலன் என்று அந்த ஆலயத்தின் சிறப்பாகும் இந்த ஆலயத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு 12 வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றினால் குழந்தை பாக்கியம் அருள் கிடைக்கும் மற்றும் ஆலயத்தில் பில்லி சூனியம் ஏவல் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் தீர்த்தம் அடித்தால் உடனே சரியாகும் ஆலயத்தில் திருமணம் ஆகாதவர்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது அவர்களுக்கு 90 நாட்களில் திருமணம் பாக்கியம் அமைந்துவிடும் ஆலயம் பஞ்சபூத சக்திகளால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இதுவே இந்த ஆலயத்தின் சிறப்பு. முருகானந்தம்ரேணுகா (பேச்சு) 19:07, 6 மார்ச் 2023 (UTC)
நாயன்மாருக்கு பத்து நாள் விழா நிகழும் ஒரே ஸ்தலம் பூம்புகலூர் (திருப்புகலூர்)
[தொகு]திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி திருக்கோயில் திருப்புகலூர் நாகை மாவட்டம் ஸ்ரீ அப்பர் பெருமான் வாழ்வியலில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து பத்து நாள் விழா நிகழ்கிறது முதல் நாள் விழா சமண சமயத்திலிருந்து சைவ சமயம் திரும்பிய சூலை நோய் நீங்கிய வரலாற்று நிகழ்வு இரண்டாம் நாள் விழா சமணர்களால் நீற்றறையில் இட்ட வரலாற்று நிகழ்வு மூன்றாம் நாள் விழா விஷம் கலந்த பால் அன்னத்தையும் யானை காலில் இடறிய உற்சவம் நான்காம் நாள் கல்லோடு இணைத்து கடலில் தள்ள அக்கல்லே தெப்பமாக மிதந்த அற்புத வரலாற்று நிகழ்வு ஐந்தாம் நாள் விழா சமணர்களின் கொடுஞ்செயல்கள் நீங்கி சிவப்பெருமானிடம் விண்ணப்பித்து சூலக்குறியும் ரிஷப குறியும் தறித்த வரலாற்று நிகழ்வு ஆறாம் நாள் விழா திருவடி தீட்சை பெற்ற வரலாற்று நிகழ்வு ஏழாம் நாள் காலை விழா ஸ்ரீ அப்பூதியடிகள் சாமாராதனை அவரது விஷம் தீண்டிய புதல்வரை உயிர்ப்பித்த ஐதீகம் இரவு ஸ்ரீ அப்பூதியடிகளை சிறப்பித்த ஐதீகம் எட்டாம் நாள் காலையில் படிக்காசு பெற்ற வரலாற்று நிகழ்வு இரவு திருமுறைக்காட்டில் வேதங்களால் திருகாப்பு செய்திருந்த திருக்கதவை அடைக்க திறக்க பாடிய வரலாற்று நிகழ்வு ஒன்பதாம் நாள் காலையில் சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு தரிசித்த ஐதீகம் இரவிலே திருக்கயிலாய அருட்காட்சி கண்ட ஐதீகம் பத்தாம் நாள் விழா அதிகாலை முதல் மறுநாள் காலை வரை தொடர் விழா நிகழ்வுகள் காலை அறுபத்தி மூவர் புறப்பாடு ஸ்ரீ அப்பர் பெருமான் மஹா அபிஷேகம் மதியம் கட்டமுது விழா நிகழ்வு மாலை திருமுறை வீதியுலா திருமுறை கருத்தரங்கம் இரவு பூம்புகலூரில் செய்த உழவார பணி அரம்பையர் நடனம் இரவு 11-30 மணிக்கு அபிஷேகம் நள்ளிரவு 2மணிக்கு மண்டப படி மஹாதீபாராதனை புஷ்ப விமானத்திற்கு எழுந்தருளல் புஷ்ப விமானத்தில் வீதியுலா அதிகாலை இறைவனோடு இரண்டற கலந்த ஐக்கிய காட்சி A GNANASKANDHAN (பேச்சு) 01:14, 3 மே 2026 (UTC)