பேச்சு:விலங்குகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

விலங்குகள் புத்தக வார்ப்புரு[தொகு]

{{வார்ப்புரு:விலங்குகள் விளக்கம்| பெயர்=நாய்| விலங்கியல் பெயர்=| பாடல்={{SUBPAGENAME}} }} இந்த வார்ப்புருவை உபயோகித்து விலங்குகளுக்கான பக்கங்களை உருவாக்கவும்.

இந்நூலை மேலும் சிறப்புடையதாக ஆக்க, பின்வரும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.[தொகு]

  • சிறுவர்கள் பார்த்து வண்ணம் அடிக்கத்தக்கதாய் விலங்குகள் குறித்த கோட்டுச் சித்திரங்கள். வண்ணம் தீட்டியா வடிவம் ஒன்று, வண்ணம் தீட்டாத வடிவம் ஒன்று.
  • விலங்குகள் குறித்த படக்கதைகள் - சிறுவர்கள் படம் பார்த்துக் கதை சொல்ல உதவும் வகையில்.
  • விலங்குகள் குறித்த மழலையர் பாடல்கள்.
  • விலங்குகள் குறித்த படங்கள், நிகழ்படங்கள், ஒலிக்கோப்புகள்.

மேலும், இந்நூலை செறிவுடையதாக்குவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.--Ravidreams 20:16, 5 நவம்பர் 2006 (UTC)Reply

முன்னுரை[தொகு]

விக்கி சிறுவர் நூல்கள் திட்டத்தின் கீழ் எழுதப்படும் விலங்குகள் - மழலையர் பதிப்பு நூலுக்கு உங்களை வரவேற்கிறோம். குழந்தைகளை விலங்குகள் இயல்பாகவே கவர்கின்றன. அவற்றை அறிந்து கொள்ளக் குழந்தைகள் ஆர்வம் காட்டுவர். தமிழில், விலங்குகள் பற்றிக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்குப் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் வகையிலும் அமைந்த தரமான நூல்கள் குறைவு. எனவே, இக்குறையைப் போக்குவதற்காக இந்நூல் எழுதப்படுகிறது. இந்நூலில் அழகான வண்ணமயமான படங்கள், எளிய விளக்கங்கள், கேள்விகள், பயிற்சிகள் இருக்கும். இவற்றைக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம்.

விக்கிநூல்கள் திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்து கொள்ள விரும்பும் தலைப்புகளில் நூற்களை எழுதுகிறோம். இந்த நூற்கள் பல மொழிகளிலும் எழுதப்படுகின்றன. அவற்றுள் தமிழும் ஒன்று. இந்நூற்கள் முழுக்க மக்களால், மக்களுக்காகத் தன்னார்வத்தின் பேரில் எழுதப்படுகிறது. எனவே, இவற்றை எந்தக் கட்டுப்பாடும் விலையும் இன்றி நீங்கள் படிக்கலாம். நீங்கள் விரும்புபவர்களுக்கும் படியெடுத்துத் தரலாம்.


தலைப்பு[தொகு]

இந்த நூல் சிறுவர்விக்கி என்ற பெயர்வெளியில் வர வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:51, 18 ஜூன் 2012 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:விலங்குகள்&oldid=10779" இலிருந்து மீள்விக்கப்பட்டது