மன்மத ரகசியம்
செக்ஸ்- ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல்..*
[தொகு]பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக்கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எதுவுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவமான செயல் என்றே கருதுகிறேhம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லியமான அறிவு இருந்தால் மட்டுமே அதில் சிக்கல்கள் வராமலும், அப்படியே வந்தாலும் அவற்றை வெற்றி கொள்ளவும் முடியும்.
இன்னும் பலர் மன்மதக்கலை என்பது சொல்லித் தொpவதில்லை, அது தன்னாலேயே ஒவ்வொருவருக்கும் தொpயும் என்பார்கள். ஆனால் நடைமுறையில் இந்தக் கருத்து கொஞ்சமும் ஒத்து வராது என்று தான் கூற வேண்டும். காரணம் இன்றைக்கு நாகாரிகத்தின் தொட்டில் எனப்படும் நாடுகள் உள்பட உலகெங்கிலும் பாலியல் குற்றங்கள் மலிந்து விட்டதைக் காண்கிறேhம். தவிர பாலியல் பற்றிய தௌpவான அறிவு, விழிப்புணர்ச்சி இல்லாததால் பலரது தாம்பத்தய வாழ்க்கையே சூன்யமாகிப் போய் விடுவதைப் பார்க்கின்றோம். தவிர இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் பலர் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்க்குப் பலியாகும் பாரிதாபத்தையும் நாம் காண்கிறேhம்.
எனவே தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும், மனிதன் மனிதனாக வாழவும் உதவும் மன்மதக்கலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இனி கட்டுரைக்குள் செல்வோமே....
உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிhpவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன. அதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர்வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன. எனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும். ஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றறும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தொpந்து கொள்ள முடியும்.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி செக்ஸ் என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே.* ஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் செக்ஸ் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் செக்சின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். அன்றாட வாழ்வில் செக்ஸ் என்ற வார்த்தையை சாதாரணமாகப் பயன் படுத்துகிறேhம்., மற்றொரு கோணத்தில் பார்த்தால் அதற்கு பாலுணர்வு என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அதனினும் ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனிதனின் ஒட்டுமொத்த பாரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான். செக்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு பாலர் என்றே பொருள்.இங்கே ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுக்கான பெயர் தாம்பத்யம்.