முதலுதவி
Appearance
- முதலுதவி என்பது நோய்வாய்பட்ட அல்லது காயம்பட்ட ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஆரம்பநிலை உடனடிச் சிகிச்சையாகும். நோயாளியையோ அல்லது காயமடைந்தவரையோ முக்கிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் முன் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நபரால் கொடுக்கப்படும் சிகிச்சையே முதலுதவி ஆகும். இந்நபர் மருத்துவத்துறையைச்சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தானாக சரியாகக்கூடிய சில நோய்களும் சிறு காயங்களும் முதலுதவியிலேயே குணமாகிவிடும். இவற்றிற்கு மேற்கொண்டு முக்கிய மருத்துவ சிகிச்சை தேவைப்படாது. இந்த முதலுதவியை மிகக் குறைந்த கருவிகளைக்கொண்டு எந்த ஒரு தனிநபரும் உயிரைக்காக்க அடிப்படைச்சிகிச்சைமுறையைக் கற்றுக்கொள்ளமுடியும்.
- முதலுதவி எல்லா மிருகங்களுக்கும் செய்யப்பட்டாலும், பொதுவாக இது மனிதர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தி கூறப்படுகிறது.