முல்லாக் கதைகள்/முல்லாவின் சட்டை

விக்கிநூல்கள் இல் இருந்து

ஒருநாள் முல்லா அவரது வீட்டு மாடியில் நடந்துகொண்டு இருந்தபோது கால் தடுமாறிக் கீழே விழுந்து விட்டார்."பொத்" என்று சத்தம் கேட்டதும் கீழே இருந்த அவருடைய மனைவி பயந்து போய்விட்டார்.

உடனே "என்னங்க ! அங்கே என்ன சத்தம்? " என்று கேட்டார்.

உடனே முல்லா சொன்னார்"ஒன்றுமில்லை.என் சட்டை கீழே விழுந்து விட்டது "

"என்னது ..சட்டை விழுந்த்தற்கா இவ்வளவு பெரிய் சத்தம் கேட்டது?"

"இல்லை ..இல்லை.. சட்டைக்குள் நான் இருந்ததால் இவ்வளவு சத்தம் " என்றார் முல்லா.