யாவா சேர்வலற்சும் யாவா வழங்கிப் பக்கங்களும்/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

யாவா இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி ஆகும். சேர்வலற்சு (Servlets) மற்றும் யே.எசு.பி என அறியப்படும் யாவா வழங்கிப் பக்கங்கள் (Java Server Pages) யாவா மொழியைப் பயன்படுத்தி வலைச் செயலியைகளை உருவாக்கப் பயன்படும் நுட்பங்கள் ஆகும். யே.எசு.பி எச்.ரி.எம்.எல் பக்கங்களில் இடப்படக் கூடியது. வலைப்பக்கங்கள் ஏற்றப்படும் பொழுது யே.எசு.பி கணிக்கப்படுகிறது. சேர்வலற்சுகள் தனியாக யாவாவில் எழுதப்பட்டவை. பொதுவான பயன்பாட்டில் காட்சிப்படுத்தல் தேவைகளுக்கு யே.எசு.பி யும், பின்தள கட்டுப்பாட்டு தர்க்க வேலைகளுக்கு சேர்வலற்சும் பயன்படுத்தப்படுகின்றன.