யாவா சேர்வலற்சும் யாவா வழங்கிப் பக்கங்களும்/இயங்கு சூழல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

யாவா சேர்வலற்சு மற்றும் யே.எசு.பி ஐயப் பயன்படுத்த உங்களுக்கு மூன்று மென்பொருட்கள் தேவை.

  • முதலாவது உங்களுக்கு யே.டி.கே என அறியப்படும் யாவா விருத்திப் பொதி (Java Development Kit - JDK) தேவை. அதனை இங்கு தரவிறக்கிக் கொள்ளலாம். இது யாவாச் செயலிகளை இயக்கத் தேவையான யே.ஆ.ஈ என அறியப்படும் யாவா இயங்குநேரச் சூழலையும் (Java Runtime Environment - JRE) உள்ளடக்கியது.
  • இரண்டாவதாக, யாவா சேர்வலற்சு மற்றும் யே.எசு.பி ஆதரவு கொண்ட யாவா வழங்கிகளை நிறுவிக் கொள்ள வேண்டும். ரொம்கற், யே.பொசு, வெப்லோசிக் எனப் பல கட்டற்ற வணிக யாவா வழங்கிகள் உள்ளன. இந்த நூலில் எடுத்துக்காட்டுக்களுக்கு கட்டற்ற வழங்கியான ரொம்கற் பயன்படுத்தப்படும்.
  • மூன்றாவதாக, ஒரு மென்பொருள் விருத்திச் சூழலைப் பயன்படுத்துவது யாவா மென்பொருள் விருத்தியை இலகுவாக்கும். எக்கிளிப்சும் நெற்பீன்சும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் யாவா விருத்திச் சூழல்கள் ஆகும்.