வாய்மை
Appearance
|
திருக்குறள் > துறவறவியல்
- 291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
- தீமை இலாத சொலல்.
- 292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
- நன்மை பயக்கும் எனின்.
- 293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
- தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
- 294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
- உள்ளத்து ளெல்லாம் உளன்.
- 295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
- தானஞ்செய் வாரின் தலை.
- 296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
- எல்லா அறமுந் தரும்.
- 297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
- செய்யாமை செய்யாமை நன்று.
- 298. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
- வாய்மையால் காணப் படும்.
- 299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
- பொய்யா விளக்கே விளக்கு.
- 300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
- வாய்மையின் நல்ல பிற.