உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:காளான் அறிவியல்- நூல்கள் 2

விக்கிநூல்கள் இலிருந்து

காளான்களின் பயன்பாடு காளான்களின் பயன்பாடு பலவகைகளில் அறியப்படுகிறது. காளான்கள் ஒரு முழுமையான மற்றும் சத்தான உணவாகும். உணவைத்தவிர, இவை மருத்துவத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காளான்கள் பொதுவாக அதிக விலையில், சந்தையில் விற்கப்படுகின்றன. எனவே இவை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும். காடுகளில் கிடைக்கும் சில அரியவகை காளான்கள் (கார்டிசெப்ஸ் சைனன்சிஸ்) இலட்சக்கணக்கில் விலைபெறும். காளான்கள் பொதுவாக இலை மற்றும் இதர கரிமப்பொருட்களை மக்கச்செய்து, அதிலிருந்து உணவைப் பெறுகின்றன. எனவே இவை இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுகின்றன. இந்த பகுதியில் காளான்களின் பயன்பாடு வகைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. 1. உணவு பயன்பாடு காளான்களில் உடல்நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழுமையாக, சரியான விகிதத்தில் உள்ளன. இவை குழந்தைகள் முதல் வயதானவர்கள், உடல்நலக்குறைவுற்றவர்கள், தாய்மார்கள் என அனைத்து தரத்தினருக்கும் சிறந்த உணவாகும். புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் மிக அதிக அளவில் காளான்களில் உள்ளன. மிகக்குறைந்த கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத காரணத்தினால், இவை குறைந்த சக்தி தரும் உணவாகும். சில காளான்களில் காணப்படும், எர்கோஸ்டிரால் (நுசபழளவநசழட) என்னும் சுரப்புநீர், மனிதர்களில் வைட்டமின் டி யை உற்பத்தி செய்ய உதவுகின்றது. அமினோ அமிலங்களாக, சிஸ்டைன் தெரோனைன் ஆகியவை காளான்களில் அதிக அளவில் உள்ளது. ஆனால் கந்தகம் சார்ந்த அமினோஅமிலங்களாகிய, எத்தியோனைன் மற்றும் சிஸ்டைன் ஆகியவை மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது.