1582 - இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் யூலியின் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறிய முதலாவது உலக நாடுகளாகின.
1917 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
1931 - இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் (படம்)பிறப்பு.
1966 - ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.