உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:காப்புரிமைகள்

விக்கிநூல்கள் இலிருந்து

விக்கிநூல்களில் வெளியிடப்படும் அனைத்து நூல்களும் திரும்பிப்பெற முடியாதபடி பொதுமத்தில் சுந்ததிரங்கள் மிகு உரிமங்களோடு வழங்கப்படுகிறன. இவை குனூ கட்டற்ற படைப்பாக்க உரிமத்தோடும் (GNU Free Documentation License (GFDL)), படைப்பாக்கப் பொதுமங்கள் குறிப்பிடுதல்-அதேமாதிரிப் பகிர்தல் உரிமத்தோடும் (Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License (CC-BY-SA)) வழங்கப்படுகின்றன. பொதுவாக, விக்கிநூல்களின் படைப்புக் காப்புரிமைகள் விக்கிநூல் பங்களிப்பாளர்களுக்குச் சொந்தமானவை. பொதுமத்தில் இருந்து பெறப்பட்டால் (எ.கா நாட்டுடைமையாக்கபட்ட பாட நூல்கள்) அல்லது அனுமதி பெறப்பட்டால் அவை அவ்வாறு குறிப்பிடப்படும்.

விக்கிநூல்களின் உள்ளடக்கங்கள் அதே உரிமங்களோடும் பங்களிப்பாளர்கள் பற்றிய ஒப்புகையோடும் (acknowledgment) படியெடுக்கப்படலாம், மாற்றப்படலாம், திருத்தப்படலாம், விநியோகிக்கபடலாம். பொதுவாக விக்கிநூல் படைப்பின் இணைய முகவரியை வழங்குவது ஒப்புகைக்கு நிபந்தனையை பூர்த்தி செய்யும். இதனால் விக்கிநூல்களின் உள்ளடக்கங்கள் தொடர்ந்து கட்டற்ற வெளியில் இருப்பது உறுதியாகிறது.