உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:விக்கிநூல்கள் என்றால் என்ன?

விக்கிநூல்கள் இலிருந்து

எளிமையாக, விக்கிநூல்கள் என்பது திறந்த உள்ளடக்கம் கொண்ட பாட நூல்களின் தொகுப்பு ஆகும். இங்கு நாம் விக்கியைப் பயன்படுத்தி கூட்டாசிரியப் படைப்புகளாக கட்டற்ற உரிமத்தோடு நூல்களை உருவாக்கிப் பகிர்கிறோம். இது யாவரும் உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்நிலை நூல் திட்டமாகும்.

விக்கிநூல்கள் கற்றலுக்கு உதவும் பாட நூல்கள், உரை நூல்கள், செய்முறை வழிகாட்டிகள், கையேடுகள் ஆகியவற்றுக்கானது. இந்த உள்ளடக்கங்கள் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக, திண்ணைப் பள்ளி, வீட்டுப் பள்ளி, விக்கிப்பல்கலைக்கழக வகுப்புக்களில் பயன்படுத்தப்படலாம். தாமாக கல்வி கற்பவர்களும் பயன்படுத்தலாம். பொது விதியாக, பாடம் அல்லது கற்றலுக்கு உதவும் நூல்கள் மட்டுமே விக்கிநூல்களில் இடம்பெறும்.

விக்கிநூல்கள் இவை அன்று[தொகு]

கீழ்வருவன விக்கிநூல்களில் இடம்பெறக்கூடாதவற்றின் பட்டியல்:

விக்கிநூல்கள் அகரமுதலி அன்று[தொகு]

அகரமுதலி என்பது ஒரு நூலென்றாலும் கூட, அதன் தேவையை உடன் புறத்திட்டமான விக்சனரி செய்துவிடும். மேலும்:

  • விக்கிநூல்கள் நிகண்டுகள் அல்ல. நிகண்டுகளுக்கு வேண்டுமானால் தனி புறத்திட்டத்தை விக்கி பொதுவில் விண்ணப்பித்துப் பெறலாம்.
  • விதிவிலக்குகள்: விக்கிநூலில் சில புறத்திட்டங்களை உருவாக்க விதிவிலக்குகள் உண்டு. எ.கா: கணித சொற்களஞ்சிய பாடநூல், அறிவியல் விதிகள் கையேடு.

மூல ஆக்கங்களை இடுவதற்கான இடம் அன்று[தொகு]

விக்கிநூல்கள் திருக்குறள், திருமந்திரம், பாரதியார் படைப்புகள் போன்ற மூல ஆக்கங்களை இடுவதற்கான இடம் இல்லை. அதற்கு விக்கிமூலத்தைப் பயன்படுத்தவும்.

வலைப்பதிவு, சமூகவலை அன்று[தொகு]

விக்கிநூல்கள் உங்கள் கருத்துக்களைப் பகிரும் வலைப்பதிவு போன்ற தளம் இல்லை. இது கற்றலுக்குத் தேவையான நூல்களை உருவாக்குவதற்கானது.

படைப்பிலக்கியத்துக்கானது அன்று[தொகு]

விக்கிநூல்களில் புதினம், கதை, கவிதை போன்ற உள்ளடக்கங்கள் பாட நூலின் ஓர் அங்கமாக மட்டுமே சேர்க்க முடியும்.

புத்தாய்வுகள் வெளியிடுவதற்கான களம் அன்று[தொகு]

விக்கிநூல்களில் புதிய ஆய்வுகளை, புதிய கோட்பாடுகளை, புதிய சொற்களை வெளியிட முடியாது.

பரப்புரை/விளம்பரக் கருவி அன்று[தொகு]

தனி நபர், அரசியல் கட்சி, சமயங்கள் தொடர்பான பரப்புரை நெடியடிக்கும் நூல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.