விக்கிநூல்கள்:விக்கியன்பு
விக்கியன்பு என்பது பயனர்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பாகச் செயல்படும் பயனர்களுக்குப் பதக்கங்கள் பரிசுப் பொருள்கள் வழங்கவும் உதவும் ஒரு நிரல்வரி (script) ஆகும். இது சில பொத்தான்களை மட்டுமே அழுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது.
இந்த முழு நிரல்வரியும் விக்கிமீடியா நிறுவனப் பணியாளரும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகிப் பயனருமான கல்டாரியால் எழுதப்பட்டது. இது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்பப் பயனர் சூர்ய பிரகாசு மூலம் தனிப்பயனாக்கப்பட்டது.
நிறுவல்
[தொகு]கருவியாக நிறுவ
[தொகு]- தற்போது கருவியாக நிறுவும் வசதிகளை இல்லை, தயவு செய்து நிரல்வரியாக நிறுவலைப்பார்க்க.
நிரல்வரியாக நிறுவ
[தொகு]- இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
importScript('பயனர்:shameermbm/wikilove.js');
குறிப்பு: தற்போது விக்கியன்பு ஆனது தங்களது நெறியத் தோலில் (Vector skin) மட்டுமே வேலை செய்யும். சி.எசு.எசு போன்ற தோல்களில் தற்போதைக்கு வேலை செய்யாது.
பயன்படுத்துதல்
[தொகு]இந்த நிரல்வரியை நிறுவி, தங்கள் உலவியின் இடைமாற்றை நீக்கிய பின் ( அழுத்தி இடைமாற்றை நீக்கவும்) இது செயல்பாட்டுக்கு வரும். அதன் பின் பதக்கம் எந்தப் பயனருக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அவரது பேச்சுப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு வலப்பக்கம் மேற்புறமாக இருக்கும் சிவப்பு நிற இதய வடிவக் குறியைச் சொடுக்கவும். அதன் பின் மிக மிக எளிய வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு பயனருக்குப் பதக்கமளிக்க முடியும்.