விசுவல் பேசிக்/முதலாவது பிரயோகம்

விக்கிநூல்கள் இலிருந்து

விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிய பின்னர் Start -> All Programs (Programs) -> Microsoft Visual Basic 6.0 -> Microsoft Visual Basic 6.0 என்றவாறு ஆரம்பிக்கவும்.

இதில் Standard.exe ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்போது போம் (form) ஒன்று தோன்றும் இதை இருமுறை கிளிக் செய்தால் இதன் மூல நிரலைப் பார்வையிடலாம் அல்லது View மெனியூவில் இருந்து Code என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

எடுத்துக்காட்டு

Private Sub Form_Load ( )
form1.show 'இது திரையில் காட்டப் பயன்படுகின்றது
print “welcome to Visual Basic Working Model Edition from Wikibooks” 'இது திரையில் தோன்றும் செய்தி
End Sub

இதில் நீங்கள் இரண்டாவதும் மற்றும் மூன்றாவது வரியைத்தான் தட்டச்சுச் செய்யவேண்டும். மேலும் விஷ்வல் பேஸிக் நீங்கள் சிறிய எழுத்துக்களில் தட்டச்சுச் செய்தாலும் தானகவே வேண்டியவாறு Capitalize பண்ணுவதை அவதானிக்கலாம். form1. என்று தட்டச்சுச் செய்தவுடன் தானகவே அது சம்பந்தமான functions திரையில் தோன்றுவதை அவதானிக்கலாம் இதனால் விஷ்வல் பேஸிக்கில் நிரலாக்கலில் பிழைகள் இயன்றவரை குறைக்கப்படுகின்றது.

விஷ்வல் பேஸிக் ' குறியீடு Comment ஆகும் இது கம்பைலர் எதுவும் செய்யாது விட்டுவிடும். விஷ்வல் பேஸிக் 6 பதிப்பில் தமிழில் comments ஏதும் போடவியலாது இதற்கு விஷ்வல் பேஸிக்.நெட் எக்ஸ்பிரஸ் எடிசன் தேவைப்படும்.

கணித்தல்கள் தொடர்பான எடுத்துக்காட்டுகள்
Private Sub Form_Load()
Form1.Show
Print "3+2 = "; 3 + 2 'addition - கூட்டல்
Print "3-2 = "; 3 - 2 'Subtraction - கழித்தல்
Print "3*2 = "; 3 * 2 'Multiplication - பெருக்குதல்
Print "3/2 = "; 3 / 2 'Division - பிரித்தல்
Print "3 mod 2 = "; 3 Mod 2 'Modulus will give the balance of division முழுஎண்ணால் பிரிக்கும் போதுள்ள மீதி
End Sub