வினை செயல்வகை
Appearance
|
திருக்குறள் > அமைச்சியல்
- 671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
- தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
- 672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
- தூங்காது செய்யும் வினை.
- 673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
- செல்லும்வாய் நோக்கிச் செயல்.
- 674. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
- தீயெச்சம் போலத் தெறும்.
- 675. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
- இருள்தீர எண்ணிச் செயல்.
- 676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
- படுபயனும் பார்த்துச் செயல்.
- 677. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
- உள்ளறிவான் உள்ளம் கொளல்.
- 678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
- யானையால் யானையாத் தற்று.
- 679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
- ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
- 680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
- கொள்வர் பெரியார்ப் பணிந்து.