விலங்குகள் - மழலையர் பதிப்பு/முன்னுரை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
விலங்குகள்

அறிமுகம்

முன்னுரை

வளர்ப்பு விலங்குகள்

நாய்
பூனை, முயல்
ஆடு

வீட்டு விலங்குகள்

மாடு, குதிரை
கழுதை

காட்டு விலங்குகள்

யானை
சிங்கம்
புலி
கரடி, சிறுத்தை
ஒட்டகம்
ஒட்டகச்சிவிங்கி
நரி, குரங்கு

பயிற்சிகள்

பாடல்கள், படங்கள்
கதைகள்
கேள்விகள்
விளையாட்டுக்கள்


அறிமுகம்

இந்த நூலின் மூலம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கு சில விலங்குகளை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகள் விலங்குகளையும் அவை வாழும் இடங்களையும் அடையாளம் கண்டு கொள்வது இந்நூலின் நோக்கமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.


முன்னுரை[தொகு]

விக்கி சிறுவர் நூல்கள் திட்டத்தின் கீழ் எழுதப்படும் விலங்குகள் - மழலையர் பதிப்பு நூலுக்கு உங்களை வரவேற்கிறோம். குழந்தைகளை விலங்குகள் இயல்பாகவே கவர்கின்றன. அவற்றை அறிந்து கொள்ள குழந்தைகள் ஆர்வம் காட்டுவர். தமிழில், விலங்குகள் பற்றி குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் வகையிலும் அமைந்த தரமான நூல்கள் குறைவு. எனவே, இக்குறையைப் போக்குவதற்காக இந்நூல் எழுதப்படுகிறது. இந்நூலில் அழகான வண்ணமயமான படங்கள், எளிய விளக்கங்கள், கேள்விகள், பயிற்சிகள் இருக்கும். இவற்றைக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரலாம்.

விக்கிநூல்கள் திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இத்திடத்தின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்து கொள்ள விரும்பும் தலைப்புகளில் நூட்களை எழுதுகிறோம். இந்த நூட்கள் பல மொழிகளிலும் எழுதப்படுகின்றன. அவற்றுள் தமிழும் ஒன்று. இந்நூட்கள் முழுக்க மக்களால் மக்களுக்காக தன்னார்வத்தின் பேரில் எழுதப்படுகிறது. எனவே, இவற்றை எந்தக் கட்டுப்பாடும் விலையும் இன்றி நீங்கள் படிக்கலாம். நீங்கள் விரும்புபவர்களுக்கும் படியெடுத்துத் தரலாம்.