ஸ்க்ரும் கையெடு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஸ்க்ரும் கையெடு ஒரு வரையறுக்கப்பட்ட வழிகாட்டி முக்கிய வழிமுறைகள்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இசுக்கிர அல்லது ஸ்க்ரும் கட்டமைப்பு/ முறையியல் கென் சுவாபர் (Ken Schwaber) மற்றும் ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது.

ஸ்க்ரும் கையேட்டின் நோக்கம்[தொகு]

ஸ்க்ரும் என்பது சிக்கலான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் மேலும் தக்கவைப்பதற்கான கட்டமைப்பாகும். இந்த வழிகாட்டி ஸ்க்ருமின் பாத்திரங்கள், ஆர்ட்டிபாட்டுகள் அல்லது களஞ்சிய பொருட்கள் மற்றும் அதற்க்கான விதிகளை ஒன்றாக கொண்டுள்ளது. கென் சுவாபர் மற்றும் ஜெஃப் சதர்லேண்ட் சேர்ந்து ஸ்க்ரம் உருவாக்கினார்கள். இந்த ஸ்க்ரம் கையேடு அவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அவர்கள் தான் ஸ்க்ரம் கையேட்டின் பின்னால் இருக்கும் மூல காரணிகள்.

ஸ்க்ருமின் வரையறை[தொகு]

மக்களின் சிக்கலான தகவமைப்பு பிரச்சனைகளை தீர்க்க வல்ல கட்டமைப்பு ஸ்க்ரும் ஆகும். இது மேலும் நல்ல திறனுடனும், படைப்பாற்றலும் கொண்ட ஒரு தரமான தயாரிப்புகளை செய்ய உதவுகிறது. ஸ்க்ரும்: 1. மிக எளிமையானது 2. எளிதாக புரிந்துகொள்ளக்கூடியது 3. அதனை மாஸ்டர் செய்வது என்பது கடினம் ஸ்க்ரம் செயல்முறை கட்டமைப்பு 1990 களின் ஆரம்பத்தில் இருந்து சிக்கலான தயாரிப்பு மேம்பாட்டு மேலாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்க்ரம்என்பது ஒரு செயல்முறையோ அல்லது உத்த்யோ அல்ல மாறாகவெவ்வேறு செயல்முறைகளையும் உத்திகளையும் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். ஸ்க்ரும் உங்களின் தயாரிப்பு மேலன்மையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து அதன் பலாபலன்களை தருகிறது.

ஸ்க்ரும் கட்டமைப்பனாது ஸ்க்ரும் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய பாத்திரங்கள் அல்லது ரோலஸ், கோப்புகள் மற்றும் விதிகளை கொண்டது. ஸ்க்ருமின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திர்க்காக் உருவாக்கப்பட்டது அது ஸ்க்ரும் பயன்பாட்டிற்கும் வெற்றிக்கும் உதவுகிறது. இந்த புத்தகம் எவ்வாறு ஸ்க்ரும் விதிகள், ஸ்க்ரும் பாத்திரங்களின் வேலைகள் அதற்க்கான கோப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட வேண்டும் என விளக்குகிறது. இது பயன்பாடு வெவ்வேறு இடங்களில் மாறுபடலாம்.

ஸ்க்ருமின் தத்துவம்[தொகு]

ஸ்க்ரும் ஒரு அனுபவாதம் சார்ந்த செயல்முறை கட்டுப்பாட்டு கோட்பாட்டின் மூலம் உருவாகியது. அறிவு என்பது நாம் அறிந்திருக்கும் அனுபவம் மற்றும் செய்யும் முடிவுகளில் இருந்து வரும் அனுபவங்களினால் எட்டப்படுகிறது என்பதை அனுபவாதம் உறுதிசெய்கிறது. ஸ்க்ரும் பல் செயலாற்று (இடரேடிவ்), கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் போன்ற முறைகளை பயன்படுத்தி முன்கூட்டியே கணிக்கவும் இடர்களை கட்டுபடுத்தவும் உதவுகிறது. அனுபவம் சார்ந்த நிகழ்முறை கட்டுப்பாட்டினை மூன்று முக்கிய தூண்கள் நிர்வகிக்கின்றனாவ அவையாவையெனில்: 1. வெளிப்படைத்தன்மை(transparency) 2. பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்) 3. தழுவல் (அடேப்ஷன்)

வெளிப்படைத்தன்மை[தொகு]

பணியின் முக்கிய அம்சங்கள் விளைவுக்கு பொறுப்பானவர்கள் காணும்படி வெளிப்படையாக இருத்தல் வேண்டும். அந்த முக்கிய அம்சங்களும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு தரநிலைய கொண்டிருத்தல் அவசியம். இது அனவரும் ஒரே விதத்தில் புரிந்து கொள்ள உதவும்.

எடுத்துக்காட்டு: 1. ஒரு செயல்முறையில் உள்ள வார்த்தைகள்அனைவரிடமும் பகிரப்பட்டு அது ஒரே அர்த்தத்தைகொடுக்க வேண்டும். 2. "செய்துமுடிக்கபட்டது" என்பதற்கான விளக்கம் வேலை செய்பவர்க்களுக்கும் அதனை அமோதிப்பவர்களும் ஒத்துக்கொள்ள கூடிய வகையில் இருக்கவேண்டும்.

பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்)[தொகு]

ஒரு ஸ்பரின்ட் குறிக்கோளை அடைவதில் உள்ள தேவையற்ற தடைகளை கலையவேண்டும் என்றால் ஸ்க்ரும் பயனாளிகள் அடிக்கடி ஸ்க்ரும் தரவுகளையும், ஆர்டிபாக்ட்டுகளைரும் மற்றும் முன்னேற்றத்தை பார்வையிடுதல் அவசியம். அவர்களின் பார்வையிடுதல் அவர்களின் வேலையை தடை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பார்வையிடுதல் பணி அனுபவம்மிக்க கண்காணிப்பாள்ர்களால் செய்யும் வேலை நேரத்தில் பொழுது சிறந்த பலன்களை தருகிறது.

தழுவல் (அடேப்ஷன்)[தொகு]

ஒரு கண்காணிப்பாளர் ஒன்றோ அதற்க்கு மேற்ப்பட்ட செயல்கள் ஏற்கத்தக்க வரம்பில் இருந்து விலகிச் செல்வததாக இருந்தால் தயாரிக்கும் பொருளானது ஏற்றுக்கொள்ளப்படாத. ஆகையால் நாம் இந்த செயல்களையோ அல்லது தயாரிப்பையோ நாம் சரி செயாவேண்டும். நாம் எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தல் மேலும் பல செயல்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியும்.

ஸ்க்ரும் நான்கு நிகழ்வுகளில் கண்காணிப்பு மற்றும் தழுவல் பணிகளை செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறது, அவையாவையெனில்: 1. ஸ்பரின்ட் திட்டமிடுதல் போது 2. தினமும் நடக்கும் ஸ்க்ரும் சந்திப்பின்போது 3. ஸ்பரின்டை மறுபரிசீலனை செய்யும்போது 4. பின்னோக்கிய ஸ்பரின்ட்

ஸ்க்ரும் குழு[தொகு]

ஸ்க்ரும் குழுவானது ஒரு தயாரிப்பு உரிமையாளர், தயாரிக்கும் குழு மற்றும் ஒரு ஸ்க்ரும் மாஸ்டரை/தலைவரை கொண்டிருக்கும். ஸ்க்ரும் குழுவானது சுய ஒழுங்குடனும் பன்முக செயல்திறனும் கொண்டிருக்கும். சுய ஒழுங்குடன் செயல்படும் குழுவானது சிறந்த முறையில் எப்படி வேலையினை முடிப்பது என்பதிலேயே தீவிரமாக இருக்கும். அது போன்ற குழுக்களுக்கு வெளியிலிருந்து யாரும் வழி காட்ட வேண்டிய அவசியமில்லை. பல்துறை குழுவினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை மற்றவரை எதிர்பார்க்காமல் தாங்களே முடிக்க கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள்.

ஸ்க்ரும் பொறுத்தவரையில் உருவாக்கப்படும் குழுவானது இணக்கத்தையும், படைப்பாற்றளையும், உற்பத்திதிறனையும் சாதகமாக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் இருக்கும். ஸ்க்ரும் குழு தனது தயாரிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாகவும், மறுசெய்கை முறையிலும் தந்து அதன் செயல்பாடு குறித்த கருத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தயாரிக்கப்பட்ட முழுமையன் தயாரிப்புகள் எப்பொழுதுமே ஒரு உபயோகப்படும் பொருளாகத்தான் இருக்க முடியும்.

தயாரிப்பின் உரிமையாளர் (Product Owner)[தொகு]

ஒரு பொருளையும் அதனை தயாரிக்கும் குழுவின் மதிப்பையும அதிகப்படுத்தும் பொறுப்பு தயாரிப்பு உரிமையாளரை சேர்ந்ததாகும்.இதனை செயல்படுத்தும் முறை நிறுவனங்களிடையே வேறுபட வாய்ப்பிருக்கிறது. ஒரு தயாரிப்பின் எஞ்சிய வேலைகளின் (product backlog) முழு பொறுப்பும் தயாரிப்பு உரிமையலாரையே சாரும். ஒரு தயாரிப்பின் எஞ்சிய வேலைககளை மேலாண்மை செய்வதில் பின்வரும் செயல்களும் அடங்கும்: • தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை தெளிவாக வரையறுத்தல் • தயாரிப்பின் நோக்கம் மற்றும் இலக்குக்களை அடைய எஞ்சிய வேலைகளை வரிசைப்படுத்துதல • டேவலப்மன்ட்குழவின் வேலைகளை மேம்படுத்துதல் • தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை அனைவருக்கும் தெரியுமபடி செய்தல், மேலும் ஸ்க்ரும் குழு அடுத்து என்ன செய்ய இருக்கிறார்கள் என்று அனைவரும் அறியும்படி செய்தல். • டேவலப்மன்ட்குழு தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை அனைவருக்கும் புரியும்படி செய்தல். இந்த மேற்ச்சொன்ன வேலைகளை தயாரிப்பின் உரிமையலரோ அல்லது டெவலப்மன்ட் குழுவோ செய்யலாம், ஆனால் தயாரிப்பின் உரிமையலரே பொறுப்பானவர். தயாரிப்பின் உரிமையாளர் ஒரே ஒரு நபராகத்தான் இருக்க முடியும். தயாரிப்பின் உரிமையாளர் ஒரு குழுவின் விருப்பங்களை தயாரிப்பின் உரிமையாளர் பிரதிபலிக்கலாம. ஆனால் தயாரிப்பின் எஞ்சிய வேலைகளின் முன்னுரிமைகளை மாற்றும் உரிமை தயாரிப்பின் உரிமையாளருக்கு மட்டுமே உண்டு. ஒரு தயாரிப்பு உரிமையாளர் வெற்றி பெறுவதற்கு ஒட்டுமொத்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவருடைய முடிவகளை மதிக்க வேண்டும். டேவலப்மன்ட்குழு முழுக்க முழுக்க தயாரிப்பு உரிமையாளரின் முன்னுரிமைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

டேவலப்மன்ட்குழு[தொகு]

ஒரு ஸ்பிரிண்டில் ஒரு "முழுமையான" வேலை செய்யக்கூடிய ஒரு தயாரிப்பை உருவாக்கும் திறன்மிக்க நிபுணர்கள் ஒரு டேவலப்மன்ட்குழுவில் இருப்பார்கள். அடுத்தடுத்த தயாரிப்புக்களை உருவாக்கும் பொறுப்பு டேவலப்மன்ட்குழுவை சார்ந்ததாகும். ஒரு நிறுவனமானது டேவலப்மன்ட் குழு தங்களது வேலைகளை ஒழுங்குபடுத்துவதர்க்கும் மேலாண்மை செய்வதற்கும் தேவையான அதிகாரத்தை வழங்குகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் சினெர்ஜி டேவலப்மன்ட் குழுவை மிகுந்த செயல்திறனுடன் செயல்பட வைக்கிறது. டேவலப்மன்ட் குழு பின்வரும் இயல்புகளை கொண்டிருக்கும்: • அவர்கள் தங்களுக்குள்ளே ஒழுங்கமைத்துக்கொள்வார்கள். குழுவில் உள்ள எந்த ஒரு நபரும் எவ்வாறு தயாரிப்பு எஞ்சிய வேலைகளை ஒரு வேலை செய்யும் தயாரிப்பது என்று கூறுவதில்லை • டெவலப்மன்ட் குழு பல்வேறு வேலைகளை செய்யும் திறன் படைத்தவர்கள், இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முழுமையான தயாரிப்பினை முடிக்கும் திறன்களை கொண்டிருப்பார்கள். • ஸ்க்ரும் டேவலப்மன்ட் குழுவில் உள்ள அனைவரையும் "டெவலப்பர்" என்றே குறிப்பிடுகிறது. அவர்கள் வெவ்வேறு வேலைகளை செய்தாலும் இந்த விதி பொருந்தும். • ஸ்க்ரும் டெவலப்மன்ட் குழுக்களில் துணை குழுக்களை அனுமதிப்பதில்லை. • குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தனித்திறமை மற்றும் தனிப்பட்ட நோக்கம் இருந்தாலும் பொறுப்பு டேவலப்மன்ட் குழுவையே சாரும்.

டெவலப்மன்ட் குழுவின் அளவு[தொகு]

ஒரு ஸ்ப்ரின்டில் முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை சுறுசுறுப்பான வகையில் முடிக்கும் அளவில் நபர்கள் இருக்கும் அளவு குழுவின் அளவு இருந்தால் போதும். மூன்று பேருக்கும் குறைவான அளவு நபர்கள் இருந்தால் நபர்களுக்களுக்கிடையேயான தொடர்புகளை குறைத்து உற்பத்தித்திறனை குறைத்துவிடும். சில நேரங்களில் சிறிய டெவலப்மன்ட் குழுக்கள் ஸ்ப்ரின்டின் பொழுது திறன் குறைபாடுகளின் காரணமாக ஒரு முழுமையானதொரு தயாரிப்பினை வழங்கமுடிவதில்லை. ஒன்பது பேருக்கு மேல் இருக்கும் குழுவில் ஒத்திசைவாக வேலை செய்வதில் வெவ்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.தயரிப்பின் உரிமையாளர் மற்றும் ஸ்க்ரும் மாஸ்டர் இந்த குழுவின் என்ன்க்கையில் சேர்க்கப்படுவதில்லை. ஸ்க்ரும் மாஸ்டர்: ஸ்க்ரும் சரியாக புரிந்துகொள்ளப்பட்டு மேற்கொள்ள படுவதை உறுதி செய்பவர் ஸ்க்ரும் மாஸ்டர். ஸ்க்ருமின் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் விதிகள் சரியாக பின்பிற்றப்படுகிறதா என்பதை ஸ்க்ரும் மாஸ்டர் உறுதி செய்கிறார். ஒரு ஸ்க்ரும் குழுவில் ஸ்க்ரும் மாஸ்டர் தலைவராகவும், தொண்டராகவும் பணியாற்றுகிறார். ஸ்க்ரும் மாஸ்டர் ஸ்க்ரும் குழுவில் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். ஸ்க்ரும் குழுவினால் ஏற்படும் நன்மைகளை ஸ்க்ரும் மாஸ்டர் அதிகப்படுத்தும் நோக்கில் வேலை செய்கிறார்.

தயாரிப்பு உரிமையாளருக்கு ஸ்க்ரும் மாஸ்டரின் சேவைகள்[தொகு]

 1. தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை சிறப்பாக மேலாண்மை செய்வது.
 2. தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை ஸ்க்ரும் குழு தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்ள உதவுதல்
 3. தயாரிப்பை திட்டமிடுதல்
 4. தயாரிப்பு உரிமையாளர் எஞ்சிய வேலைகளை வரிசைப்படுத்துதலை அறிந்துள்ளதை உறுதிப்படுத்துதல்
 5. தயாரிப்பில் துரித்த்தன்மை அல்லது அஜிலிட்டி இருப்பதை உறுதி செய்தல்
 6. ஸ்க்ரும்க்கு தேவையான ஈவ்ண்டுகளை நிர்வகித்தல்

டெவலப்மன்ட் குழுவிற்கு ஸ்க்ரும் மாஸ்டரின் சேவைகள்[தொகு]

 1. டெவலப்மன்ட் குழுவிற்கு சுய ஒழுக்கமும் மற்றும் பல் திறன் செயலபடுகளையும் கற்றுத் தருவது.
 2. உயர் தரமான பொருட்களை தயார் செய்ய உதவுவது
 3. டெவலப்மன்ட் குழுவிற்கு ஏற்ப்படும் சிக்கலை தீர்த்து முன்னேருவதர்ககான வழிகளை அமைத்தல்
 4. ஸ்க்ரும் இவன்ட்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்
 5. ஸ்க்ரும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் டெவலப்மன்ட் குழுவிற்கு தேவையான உதவிகளை செய்தல்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஸ்க்ரும்_கையெடு&oldid=13688" இருந்து மீள்விக்கப்பட்டது