1-ஆந் திருமொழி - கதிராயிரம்
Appearance
|
--வெ.ராமன் 09:01, 20 ஏப்ரில் 2006 (UTC)
ஸர்வேஸ்வரனைக் காண வேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருளர் என்றும் ஆழ்வார் இருவிதமாகக் கூறுதல் அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் கதிராயிர மிரவி கலந்தெரித்தா லொத்த நீள்முடியன்* எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்* அதிரும் கழற்பொருதோள் இரணியனாகம் பிளந்து அரியாய்* உதிரமளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர். 1 நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம்* ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்* காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க* வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர். 2 கொலை யானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய* சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்* தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்ட டைப்ப* அலையார் கடற்கரை வீற்றிருந் தானை அங்குத்தைக் கண்டாருளர். 3 தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட* மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்* ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்* வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர். 4 நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும்* முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்* வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி* சேனை நடுவுபோர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர். 5 பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க வல்லானை* மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்* பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பௌவம் ஏறிதுவரை* எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர். 6 வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்* உள்ளவிடம் வினவில் உமக்கு இறைவம்மின் சுவடுரைக்கேன்* வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று* கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கைசெய்யக் கண்டாருளர். 7 நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே* நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்* ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை* பாழிலுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர். 8 மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவு மெல்லாம்* திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்* எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து* வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர். 9 கரிய முகில்புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து* புரவிமுகம் செய்து செந்நெலோங்கி விளைகழனிப் புதுவை* திருவிற் பொலிமறை வாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே. 10 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.