5-வது திருமொழி - ஆசைவாய்

விக்கிநூல்கள் இலிருந்து
--வெ.ராமன் 10:46, 24 ஏப்ரில் 2006 (UTC)

      ஸம்ஸாரிகளுக்கு ஹிதோபதேசம் செய்தல் 

           எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என்புத்திரர் பூமி*
வாச வார்குழலா ளென்று மயங்கி மாளுமெல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும் கேழலாகிய கேடிலீ! என்றும்*
பேசுவாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில்நம் பரமன்றே.                       1

சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்றலேறிக் குழம்பிருந்து* எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்*
வாயினால் நமோநாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி*
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக்கொடுக்கிலும் போக வொட்டாரே.  2

சோர்வினால் பொருள்வைத்த துண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வினவிலும் வாய்திறவாதே அந்தகாலம் அடைவதன் முன்னம்*
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நட்டி*
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.            3

மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினைஉள்ளெழ வாங்கி*
காலுங்கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணுறக் கமதாவதன் முன்னம்*
மூல மாகியஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி*
வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே.                4

மடிவழி வந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே*
கடைவழி வாரக் கண்ட மடைப்பக் கண்ணுறக் கமதாவதன் முன்னம்
தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்*
இடைவழியில் நீர்கூறையும் இழவீர் இருடீகேச னென்றேத்த வல்லீரே.                5

அங்கம் விட்ட வையைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை*
சங்கம் விட்டவர் கையை மறித்துப் பையவே தலைசாய்ப்பதன் முன்னம்*
வங்கம் விட்டுலவும் கடற்பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில்
தங்க விட்டு வைத்து* ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்க லாமே.       6

தென்னவன் தமர்செப்ப மிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து*
பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின்முன்னாக இழுப்பதன் முன்னம்*
இன்னவன் இனையா னென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி*
மன்னவன் மதுசூத னென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே.                        7

கூடிக் கூடிஉற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*
பாடிப் பாடி ஓர்பாடையி லிட்டு நரிப்படைக்கு ஒருபாகுடம் போலே*
கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கௌத்துவமுடைக் கோவிந்தனோடு*
கூடி யாடிய உள்ளத்த ரானால் குறிப்பிடம் கடந்து உய்யலு மாமே.                   8

வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற
தாய்ஒரு பக்கம் தந்தைஒரு பக்கம் தாரமும் ஒருபக்கம் அலற்ற*
தீஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற*
மாய்ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.                9

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான்மேல்*
பத்தரா யிறந்தார்பெறும் பேற்றைப் பாழித் தோள்விட்டு சித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்கொருங்கித் திருமாலைச் செய்தமாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்கொருங்கித் திருமால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.               10

        பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=5-வது_திருமொழி_-_ஆசைவாய்&oldid=3411" இலிருந்து மீள்விக்கப்பட்டது