திருக்கோத்தும்பி/உரை 37-40

விக்கிநூல்கள் இலிருந்து

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து

நாயுற்று செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்

தாயுற்று வந்தென்னை ஆட்கொண்ட தன்கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! நான் நோயுற்று - நான் பிணியையடைந்து, மூத்து - முதிர்ந்து, நுந்து கன்றாய் இங்கு இருந்து - தாய்ப்பசுவால் தள்ளப்பட்ட கன்றையொத்தவனாய் இவ்விடத்திலிருந்து, நாய் உற்ற செல்வம் - நாய் பெற்ற இழிந்த செல்வம் போன்ற இவ்வுலக இன்பத்தை, நயந்து அறியா வண்ணம் - விரும்பி அனுபவியாதபடி, எல்லாம் - எல்லா வகையாலும், தாய் உற்று வந்து - தாய் போல எழுந்தருளி, என்னை ஆட்கொண்ட - என்னை அடிமை கொண்ட, தன் கருணைத் தேயுற்ற செல்வற்கே - தன் கருணையாகிய ஒளி பொருந்திய செல்வனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

நுந்து கன்றாவது, தாய்ப்பசுவினால் பால் கொடுக்காமல் உதைத்துத் தள்ளப்பட்ட கன்றாம். நாயுற்ற செல்வமாவது, மாமிசம் எலும்பு முதலிய இழிந்த பொருளாம். தாயுற்று வருதலாவது, துன்பத்தினின்றும் எடுத்து இன்பத்தைக் கொடுக்க வருதல். தேசு, ‘தேயு’ எனத் திரிந்தது.

இதனால், உலக இன்பத்தின் இழிவு கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_37-40&oldid=2359" இலிருந்து மீள்விக்கப்பட்டது