செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/பப்பாளி

விக்கிநூல்கள் இலிருந்து

"பப்பாளிப் பழம் என்றால் எனக்கு உயிர்.எவ்வளவு இருந்தாலும் சாப்பிட்டு விடுவேன்" என்றாள் சுந்தரி.

"பப்பாளிப் பழம் யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கும் மிகவும் பிடிக்கும்.ஆனால் எங்கள் வீட்டில் நான் ஆசையுடன் ஒரு பப்பாளி மரம் வளர்த்தேன்.அது நிறையப் பூ பூத்ததே தவிர ஒரு காய் கூடக் காய்க்கவில்லை.கடைசியில் என் அப்பா அதை வெட்டிப் போட்டுவிட்டார்" என்று வருத்தத்துடன் சொன்னான் சுந்தர்.

"சுந்தர், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?பப்பாளியில் ஆண் பப்பாளி , பெண் பப்பாளி என்று இரண்டு வகை உண்டு.ஆண் பப்பாளி சரம் சரமாகப் பூக்கும்.பெண் பப்பாளியோ ஒற்றைப் பூவாகத்தான் பூக்கும்.ஆண் பப்பாளி ஒரு போதும் காய்க்காது.பெண் பப்பாளிதான் காய்க்கும்.ஒரு வேளை உங்கள் வீட்டில் இருந்த்து ஆண் பப்பாளியோ என்னவோ? " என்றாள் சுந்தரி.

மரங்களில் கூட ஆண் ,பெண் இனங்கள் இருப்பதை அறிந்து சுந்தருக்கு ஒரே ஆச்சரியம்!

"ஆமாம், பப்பாளி மரத்துக்குக் கிளைகள் உண்டா? " என்றாள் சுந்தரி.

"பப்பாளி மரத்துக்கு கிளைகள் இல்லை,சில இடங்களில் ஓரிரு கிளைகள் கொண்ட மரங்களைக் காணலாம்."



பப்பாளி இலை