இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்/பொறியியல் நெகிழிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

நெகிழி என்னும் சொல்லுக்கு பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருள்கள் முறுகலான பொருட்கள் அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருட்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (yield) என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும் .

பிசின்[தொகு]

பிசின் ( resin) என்பது மரத்தில் ( குறிப்பாக கோனிபாரசு மரம் ( coniferous tree)) இருந்து சுரக்கும் ஒரு திரவம். இந்த பிசினில் கைட்ரோகார்போன் ( Hydrocarbon) இருக்கிறது . இது ரசாயன சேர்வைகளுக்கு ( chemical constituents ) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு . இவை மெருக்கெண்ணெய் ( varnish ) , ஒட்டீரம் ( adhesive ) , தூபம் அல்லது நறும்புன்னை ( perfume) முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும் . இதே போன்ற தன்மை உடைய மற்ற செயற்கைப் பொருட்களுக்கும் இந்த சொல்லை பயன்படுத்துவார்கள் .பிசின்களின் வரலாறு மிகப்பெரியது மற்றும் இதனை விளக்கியவர்கள் பண்டைய கிரேக்க தியோபிரசுடச் மற்றும் பண்டைய ரோமானிய பிளினி தி எல்டர் , குறிப்பாக பிராங்கின்சென்சு மற்றும் மிரத் என்பவைகளை . அவை நறும்புன்னைகளாகவும் மற்றும் பல சமய பயன்பாடுகளாகவும் பயன் படும் மிக விலை மதிப்புள்ள பொருட்கள்.