பயனர் பேச்சு:செல்வா
தலைப்பைச் சேர்விக்கி நூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் நூல் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Ravidreams 16:45, 11 மே 2007 (UTC)
மெய்யியலும் சமயமும் & பண்பாடும் வாழ்வியலும்
[தொகு]மெய்யியலும் சமயமும் என்றும் பண்பாடும் கலைகளும் வாழ்வியலும் என்று மீள் வகைப்படுத்துவது கூடப் பொருத்தமாக இருக்குமா? நன்றி. --Natkeeran (பேச்சு) 02:31, 4 ஜூலை 2012 (UTC)
- நற்கீரன், மெய்யியல் என்பதை Philosophy என்னும் பொருளில் பயன்படுத்தினேன். அரசியல், குமுகவியல் போன்றவற்றைப் பற்றிய அறிவுசார் துறைகளையும் மெய்யியல் எனலாம் (ஆங்கிலத்திலும் மேற்கு ஐரோப்பிய மொழிகளிலும் இப்படியே). வாழ்வியல் என்பதை humanities என்னும் சொல்லையும் உள்வாங்குமாறு பயன்படுத்தினேன். தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். சமயம், கடவுளியல் (theology) அவை சார்ந்த இலக்கியம், வரலாறு அது சார்ந்த இலக்கியம் எல்லாமும் வேறு வேறு. எப்படிப் பகுத்தால் நமக்கு அறிவுடையதாக/பொருளுடையதாக இருக்குமோ அப்படிப் பகுத்துக்கொள்ளலாம். எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. --செல்வா (பேச்சு) 03:31, 4 ஜூலை 2012 (UTC)
- முதற்பகுப்பாக வாழ்வியலும், அதன் உட்பிரிவாக மெய்யியலையும் பகுத்துள்ளேன். நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 12:31, 5 ஜூலை 2012 (UTC)
பொறுத்துக் கொள்ளுங்கள்
[தொகு]எனது மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமான நடையில் இருந்ததை நானே அறிந்தேன். தங்கள் திருத்தங்களுக்கு நன்றி. தங்கள் திருத்தங்களுக்காகவே மேலும் மொழிப்பெயர்க்காமல் இருந்தேன். தற்போது சில நுட்பமான உட்கருத்துக்களை புரிந்து கொள்ளமுடிகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் நன்றாக மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன். நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 04:15, 5 ஜூலை 2012 (UTC)
எண்முறை மின்னணுவியல்
[தொகு]எண்முறை மின்னணுவியல் எனற ஒரு நூலை தொடங்கியுள்ளேன் நீங்களும் இணைந்தீர்கள் என்றால் நன்று. விக்கிநூலில் ஒரு சிறப்பான நூலாவது காட்சிப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். --இராஜ்குமார் (பேச்சு) 07:43, 18 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 18 ஏப்ரல் 2013 (UTC)