செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/இலவம்

விக்கிநூல்கள் இலிருந்து

இந்த மரத்தில் இருந்து இலவம் பஞ்சு கிடைக்கிறது. "இல்வம் பஞ்சில் துயில்" என்று ஆத்திசூடியில் படித்து இருப்பீர்கள் "இலவு காத்த கிளி" என்று ஒரு வழக்கு உண்டு.

"இலவு காத்த கிளி"என்றால் என்ன பொருள் என்று உனக்குத்தெரியுமா? என்று சுந்தரைக் கேட்டாள் சுந்தரி.

"ஏன் கேட்கிறாய்?" என்றான் சுந்தர்.

"ஒன்றுமில்லை.இந்தத் தடவையாவது தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவாயா அல்லது வழக்கம் போல சுந்தருக்கு விட்டுக் கொடுத்து விடுவாயா என்று காலையில் என் அப்பா கேட்டார்.அதற்கு என் அம்மா ,"நீங்களும் ஒவ்வொரு தடவையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அந்தப் பையன் முதல் மதிப்பெண்ணை விட்டுத்தர மாட்டான்.நீங்களும் உங்கள் பெண்ணும் இலவு காத்த கிளி மாதிரி காத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்" என்றார்கள்.

"ஓ அப்படியா? "