ஈகை
Appearance
திருக்குறள் > இல்லறவியல்
« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »
- 221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
- குறியெதிர்ப்பை நீர துடைத்து.
- வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.
- குறியெதிர்ப்பை நீர துடைத்து.
- 222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
- இல்லெனினும் ஈதலே நன்று.
- சுவர்க்கம் கிடைக்கும் என்றாலம் ஏற்றுக்கொள்ளுதல்(பிச்சை எடுத்தல், இருக்கும் போது ஏற்றுக்கொள்ளல்) தீதானது. சுவர்க்கம் கிடைக்காது எனினும் ஈய வேண்டும்
- இல்லெனினும் ஈதலே நன்று.
- 223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
- குலனுடையான் கண்ணே யுள.
- இல்லை என்னும் துன்பதை உரைக்காமல் இருப்பது ஈதல் என்னும் பெரும் பண்பையுள்ள குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே இருக்கும்
- குலனுடையான் கண்ணே யுள.
- 224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
- இன்முகங் காணும் அளவு.
- இரக்கப்படுதலே பெருமையில்லை. இரந்தவர் இன்முகம் எப்போது அடைகிறாறோ அப்போதே இரத்தல்போல இரக்கப்படுதலும் இனிமையானதாகும்
- இன்முகங் காணும் அளவு.
- 225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
- மாற்றுவார் ஆற்றலின் பின்.
- தவம் செய்பவர்களுக்கு பெரும் ஆற்றல் பசி இல்லாமல் போதல் அல்லது பசி பொறுத்தல் ஆனால் அந்த ஆற்றலையும் விட சிறந்தது கொடையினால் மாற்றுவார் ஆற்றலே
- மாற்றுவார் ஆற்றலின் பின்.
- 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
- பெற்றான் பொருள்வைப் புழி.
- வறியவறின் பசி தீர்த்தலே பொருளை பெற்றவன் பொருளை வைக்குமிடம். அதாவது தான் பெற்ற செல்வத்தை வைக்கும் இடம் எவ்விடமென்றால்அடுத்தவர் பசி தீர்க்கும் இடமே
- பெற்றான் பொருள்வைப் புழி.
- 227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
- தீப்பிணி தீண்டல் அரிது.
- பகுத்து உண்ணுதல் என்னும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீப்பிணி என்றும் தீண்டாது.
- தீப்பிணி தீண்டல் அரிது.
- 228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
- வைத்திழக்கும் வன்க ணவர்.
- ஈந்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் யாரென்றால் தன் உடைமையை தானே வைத்துக்கொண்டு பின்பு அதை இழந்துவிடும் அருளில்லாதவர்களே
- வைத்திழக்கும் வன்க ணவர்.
- 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
- தாமே தமியர் உணல்.
- இரத்தல்(பிச்சை எடுத்தல்) இனிமையானது கிடையாது. அதையும் விட துன்பம் தரக்கூடியது நிச்சாயமாக எதுவென்றால் இது தன் செல்வம் போதாது என்று அடுத்தவர்க்கு கொடுக்காமல் தானே சேர்த்துவைத்து உண்ணுதல்.
- தாமே தமியர் உணல்.
- 230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
- ஈதல் இயையாக் கடை.
- சாதலே கொடுமையாது ஆனால் அதுவே இனிமை தரக்கூடியது அடுத்தவருக்கு கொடுக்க முடியவில்லை யென்றால்
- ஈதல் இயையாக் கடை.