8-வது திருமொழி - மாதவத்தோன்
Appearance
--வெ.ராமன் 09:50, 10 மே 2006 (UTC) திருவரங்கம் தரவு கொச்சகக்கலிப்பா மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை* ஓதுவித்ததக் கணையா உருவுருவே கொடுத்தானூர்* தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்* போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே. 1 பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்* இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்* மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்* சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே. 2 மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்* உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்* திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே. 3 கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய* கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்* தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே. 4 பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை* உருவரங்கப் பொருதழித்து இவ்வுலகினைக் கண்பெறுத்தானூர்* குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே. 5 கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே* ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்* தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து* யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே. 6 கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்* தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே. 7 வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்* எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்* எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி* மல்லிகை வெண்சங்கூதும் மதிளரங்க மென்பதுவே. 8 குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்* நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்* குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி* மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே. 9 பருவரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை* செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்* திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு* இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லாரடியோமே. 10 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.