மருத்துவ வினா விடைகள்/தாய்மை
Appearance
கருச்சிதைவுக்கும் கருக்கலைப்புக்கும் என்ன வேறுபாடு ?
[தொகு]கருச்சிதைவு (Miscarriage) என்பது கருவுற்றிருக்கும் பெண்ணின் கரு மேலும் உயிருடன் இருக்க முடியாத நிலையில் தானே அழிந்து போவதைக் குறிக்கும். மூன்று காரணங்களால் இது நிகழும். அவை,
- கருவில் உள்ள கோளாறுகள் - எ.கா. மரபணுக் கோளாறுகள்
- தாயிடம் உள்ள கோளாறுகள் - எ.கா. சிஃபிலிஸ், பாஸ்ஃபோலிப்பிடுகளுக்கு எதிரான ஆன்டிபாடிகள்
- தாயிலும் கருவிலும் உள்ள கோளாறுகள்
கருக்கலைப்பு என்பது என்பது மனித முயற்சி கொண்டு கருவைக் கலைத்தல்.