பொருள் நோக்கு நிரலாக்கம்/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

நடைமுறையில் நான்கு முதன்மை நிரலாக்க கருத்தியல்கள் உள்ளன. அவையானவை: ஏவல் (imperative) அல்லது செய்முறை (procedural), பணிமுறை (functional), பொருள் நோக்கு (object oriented), ஏரண முறை (logical) ஆகியன. இதில் பொருள் நோக்கு நிரலாக்கம் என்பது மென்பொருளை பல பொருட்களாகவும் அவற்றுக்கிடையேயான ஊடாட்டமாகவும் அணுகும் முறை ஆகும்.

நெடுங்காலமாக நிரல்கள் செய்முறை நோக்கில் எழுதப்பட்டு வந்தன. அதாவது செய்யப்பட வேண்டிய பணிகள் வரிசையாக விபரிக்கப்பட்டன. இந்த முறையில் மென்பொருட்களை விருத்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அகில மாறிகளைக் (global variables) யையாழுதல், புதிய செயற்கூறுகளை வடிவமைத்தல், தனிப்படுத்தி வழு நீக்கல், நிரலை மீள் பயன்படுத்தல் உட்பட்ட பல்வேறு காரணங்களால் பொருள் நோக்கு நிரலாக்க அணுகுமுறை சிறந்தாதகக் கருதப்படுகிறது.

1960 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிமியுலா (Simula) மொழியே முதலாவது பொ.நோ.நிரலாக்க மொழியாகக் கருதப்படுகிறது. இதுவே வகுப்பு, பொருள், உள்வகுப்பு போன்ற மொழிக் கூறுகளை அறிமுகப்படுத்தியது. பொருள் நோக்கு நிரலாக்கம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய மொழி சிமோல்ரோக் (Smalltalk) ஆகும். இந்த மொழியே முதல்முறையாக மரபியல்பு என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. சிமியுலாவினால் உந்தப்பட்டு 1980 களில் அதிக பயன்பாட்டில் இருந்த சி மொழிக்கு பொ.நோ கூறுகளைக் கொண்டுவரும் நோக்குடன் சி++ மொழி பியார்னே இசுற்றூத்திரப்பு (Bjarne Stroustrup) அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இம் மொழி பலவழி மரபியல்பாக்கம் (multiple inheritance), நுண்புல வகுப்பு (abstract class), நிலையான உறுப்புச் செயலி (static member function) போன்ற கூறுகளை அறிமுகப்படுத்தியது. 1995 இல் வெளியிடப்பட்ட யாவா மொழி தொடக்கத்தில் இருந்தே பொ.நோ நிரலாக்கத்தை ஒர் இலக்காக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. பி.எச்.பி, பெர்ள், பைத்தோன், ரூபி போன்ற பல்வேறு மொழிகளும் பொ.நோ நிரலாக்கக் கூறுகளுக்கான வசதிகளை புதிய பதிப்புகளில் வழங்குகின்றன.

நான்கு தூண்கள்[தொகு]

  • Abstraction
  • Encapsulation
  • Inheritance
  • Polymorphism