பொருள் நோக்கு நிரலாக்கம்/வகுப்பும் பொருளும்

விக்கிநூல்கள் இலிருந்து

பொருள் நோக்கு நிரலாக்கம் என்பது மென்பொருளை பொருட்களாகவும் அவற்றுக்கிடையேயான ஊடாட்டமாகவும் மாதிரிப்படுத்தி வடிவமைத்தல் ஆகும். நிரலாக்கத்தில் பொருள் என்பது பண்புகள் அல்லது நிலைகளையும் (properties or states) செயல்கள் அல்லது நடத்தைகளையும் (methods or behavior) கொண்ட தன்நிறைவான ஒரு கூறு ஆகும். பொ.நோ.நிரலாக்கத்தில் அடிப்படை உறுப்பு இந்தப் பொருள் ஆகும்.

வகுப்பு என்பது ஒரு பொருளை வடிவமைப்பதற்கான வார்ப்பு அல்லது அச்சு ஆகும். ஒவ்வொரு பொருளும் ஒரு வகுப்பைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறது. ஒரே மாதிரியான, அல்லது சிறிய வேறுபாடுகளின் பல பொருட்களை உருவாக்க ஒரு முதன்மை வகுப்பு பயன்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

யாவா[தொகு]

package student;

public class ணவர {
	// பண்புகள்/மாறிகள்
	protected int ணவர_எண;
	protected String யர;
	
	// கட்டுநர்
	public ணவர(int ணவர_எண, String யர){
		this.ணவர_எண = ணவர_எண;
		this.யர = யர;
	}
	// பெறுநர்கள்/இடுநர்கள்
	public String யர_ப(){
		return this.யர;
	}	
	public void யர_இட(String யர){
		this.யர = யர;
	}
	
	// செயலிகள்
	public boolean வக_பதி(String வக, String கலி){
		System.out.println(this.யர + " " + வக + " வகுப்பில் " + கலி + " ஆண்டுக்கு சேர்ந்துள்ளார்.");	
		return true;
	}
}

மேலே சுட்டப்பட்ட வகுப்பை பின்வரும் எடுத்துக்காட்டில் போன்று பயன்படுத்தலாம்:

package student;

// எடுத்துக்காட்டு
public class Demo {

	public static void main(String args[]){
		String ணவர_பயர;
		ணவர  = new ணவர(3891, "சோதியா");
		ணவர_பயர = .யர_ப();
		System.out.println("இந்த மாணவரின் பெயர்: " + ணவர_பயர);
		.வக_பதி("உயிரியல்", "2014");

	}
	
}

மேற்கூறிய எடுத்துக்காட்டை இயக்கும் போது கிடைக்கும் வெளியீடுகள்:

இந்த மாணவரின் பெயர்: சோதியா
சோதியா உயிரியல் வகுப்பில் 2014 ஆண்டுக்கு சேர்ந்துள்ளார்.