யாவாக்கிறிட்டு/பொருட்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

யாவாக்கிறிட்டு மொழியில் கையாழப்படக் கூடிய அனைத்தும் பொருட்களே. அணி, சரம், திகதி போன்ற மொழிக் கூறுகளும் பொருட்களே. யாவாக்கிறிட்டில் பொருட்கள் பொருள் நோக்கு நிரலாக்க மொழிகள் போன்று வகுப்புக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதில்லை. மாற்றாக முன்மாதிரிகளைப் (prototype) பயன்படுத்தி பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

யாவாக்கிறிட்டு மொழியில் பொருட்கள் உருவாக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று கட்டுநர் (Constructor) பயன்படுத்தி, மற்றியது மதிப்புரு குறிமுறை (Literal Notation) ஊடாக.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

மதிப்புரு குறிமுறை[தொகு]

var கண்ணன் = {
	பெயர்: 'திலீபன்',
	வயது: '25',
	தொழில்: 'மருத்துவர்',
	பேசு: function (){
		alert ("எனது பெயர் " + this.பெயர்);
	}
};

alert (கண்ணன்.பெயர்);
கண்ணன்.பேசு();

கட்டுநர்[தொகு]

var நபர் = function (பெயர், வயது, தொழில்){
	this.பெயர் = பெயர்;
	this.வயது = வயது;
	this.தொழில் = தொழில்;
	this.பேசு = function (){
		alert ("எனது பெயர் " + this.பெயர்);
	}		
}

var கண்ணன் = new நபர்('கண்ணன்', '25', 'மருத்துவர்');

alert (கண்ணன்.பெயர்);
கண்ணன்.பேசு();