பொருள் நோக்கு நிரலாக்கம்/இணைவு

விக்கிநூல்கள் இலிருந்து

இணைவு (Association) என்பது இரு வகுப்புகளுக்கு இடையேயான ஒரு வகை உறவு ஆகும். ஒரு வகுப்பு இன்னுமொரு தனித்தியங்கும், தனியே வாழ்க்கை வட்டம் கொண்ட இன்னுமொரு வகுப்புடனான தொடர்பு இணைவு ஆகும். இந்த வகை உறவில் ஒன்றை ஒன்று உடைமை கொள்வதில்லை. ஆகையால் இந்த வகை உறவு ஒரு வகுப்பு இன்னுமொரு வகுப்பை பயன்படுத்தல் ("uses a") உறவு என்பர்.

எடுத்துக் காட்டாக பல மாணவர்கள் ஒரு வகுப்பை எடுக்கலாம். ஒரு மாணவர் பல வகுப்புக்களை எடுக்கலாம். ஆனால் இரண்டு பொருட்களுக்கும் உடைமை உறவு இல்லை. மாணவரோ, வகுப்போ தனித்தனியே உருவாக்கப்படலாம், மாற்றப்படலாம், நீக்கப்படலாம்.


வெளி இணைப்புகள்[தொகு]