பொருள் நோக்கு நிரலாக்கம்/இடைமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

இடைமுகம் என்பது ஒரு வகுப்பின் அனைத்து செயலிகளின் கையெழுத்துப் பட்டியல் ஆகும். மாறிலிகளை இது கொண்டிருக்கலாம். ஒரு வகுப்பு இடைமுகத்தை நிறைவேற்ற அல்லது நீட்டும் (extend) போது இடைமுகத்தில் வரையறை செய்யப்பட்ட அனைத்து செயலிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இடைமுகத்தின் பயன்கள்[தொகு]

  • இடைமுகத்தை வரையறை செய்வதன் ஒரு வகுப்பின் செயலிகள் அல்லது சேவைகள் தொடர்பான ஒரு தெளிவான உறுதியான ஒப்பந்தம் முன்வைக்கப்படுகிறது.
  • இடைமுகம் எப்படி ஒரு செயலி நிறைவேற்றப்படுகிறது என்ற விபரங்களையும் சுதந்திரத்தையும் நிறைவேற்றுபவருக்கு வழங்கும் அதே வேளை, அந்த வகுப்புக்களைப் பயன்படுத்துவோருக்கு நிலையான தொடர்பாடல் முறையைத் தருகிறது. இதனால் நிறைவேற்றம் தொடர்பான மாற்றங்களையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
  • நிரலாக்கத்தின் வடிவமைப்பில், பணிப் பிரிப்பில், ஆவணப்படுத்தலில் இடைமுகம் உதவுகிறது.