எக்சு.எம்.எல் இசுகீமா/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்தை உருவாக்கிய பின் அந்த ஆவணம் ஒரு வரையறைச் சரியாகப் பின்பற்றி செல்லுபடியாக்கிறதா (Validates) என்று பார்ப்பது அவசியமாகிறது. செல்லுபடியாகும் எக்சு.எம்.எல் ஆவணம் என்பது அதன் உறுப்புகள், பண்புகள், பிற கூறுகள் வரையறைக்கு ஏற்ற மாதிரி உள்ளதா என்பதை உறுதிசெய்தல் ஆகும்.

எக்சு.எம்.எல் பரிந்துரைகள் எக்சு.எம்.எல் ஆவணங்களை செல்லத்தக்கதாகப் பார்க்கும் பாகுபடுத்திகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறது.

  1. செல்லுபடியாக்கா பாகுபாடுத்திகள் (non-validating)
  2. செல்லுபடியாக்க பாகுபடுத்திகள் (validating)

முதலாவது வகை ஒர் ஆவணம் எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்ப நல்லமைவு (well-formed) கொண்டுள்ளதாக என்று மட்டும் சரிபார்க்கும். இரண்டாவது வகை ஓர் ஆவணம் டி.ரி.டி (DTD - Document Type Definition) அல்லது எக்சு.எம்.எல் இசுகீமாவில் (XML Schema) வரையறை செய்யப்பட்ட விதிகளுக்கு ஏற்ப செல்லுபடியாகிறதா என்று சரிபார்க்கும். இது எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்பவும் ஆவணம் அமைந்துள்ளதா என்றும் பார்க்கும்.

டி.ரி.டி அல்லது எக்சு.எம்.எல் இசுகீமா ஆகியவை குறிப்பிட்ட தேவைகளுக்காக எக்சு.எம்.எல் ஆவணக்களின் கட்டமைப்பை வரையறை செய்யப் பயன்படும் குறியிட்டு முறைகள் ஆகும். இந்த வரையறைகள் எக்சு.எம்.எல் ஆவணம் எவ்வாறு அமையும் என்பதை தெளிவாக பல்தரப்பட்ட பங்குத்தாரகளுக்கு உறுதி செய்கிறது. மேலும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி ஒர் ஆவணம் இந்த வரையறைக்கு செல்லுபடியாகும் என்பதைப் பார்க்கவும் உதவுகிறது.