மாங்கோடிபி/மாங்கோடிபியைப் பயன்படுத்த தொடங்குதல்

விக்கிநூல்கள் இலிருந்து

மாங்கோடிபியுடன் இணைக்க[தொகு]

மாங்கோடிபி ஷெல்
மாங்கோடிபி ஷெல்

மாங்கோடிபியுடன் இணைக்க mongo.exe என்ற கட்டளையை பயன்படுத்த வேண்டும். மாங்கோடிபியை இணைப்பதற்கு தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:

C:\mongodb\bin\mongo.exe

இதனை செயல்படுத்தும் பொழுது இயல்பாக நுழைவாயில் என் 27017ல் mongod.exe யுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடும். அது பின்வரும் படத்தில் உள்ளது போல ஒரு ஷெல்லை காண்பிக்கும்.

தரவுத்தளத்தை தேர்வு செய்தல்[தொகு]

மாங்கோ ஷெல் தொடங்கியவுடன் டெஸ்ட் தரவுத்தளம் தேர்வு செய்யப்பட்டு விடும். தற்போது தெரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தை பார்க்க பின்வரும் கட்டளையை இடவும்:

db

தொகுப்பு உருவாக்குதல் மற்றும் ஆவணத்தை உள்ளிடுதல்[தொகு]

இந்த பகுதியில் ஆவணங்களை தொகுப்பில் எப்படி உள்ளிடுவது என்று பார்ப்போம். இதற்காக mydb என்ற தரவுத்தளத்தையும் உருவாக்க உள்ளோம்.

பொதுவாக மாங்கோடிபியானது ஒரு தொகுப்பினை முதல் முறை பயன்படுத்தும்போதே உருவாகிவிடும். ஒரு தொகுப்பில் ஆவணங்களை உள்ளிடுதளுக்கு முன் தொகுப்பு உருவாக்கபட்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தற்போது தேர்வு செய்ப்பட்டுள்ள தரவுத்தளம் mydb இல்லையெனில் use mydb மூலம் mydb என்ற தரவுத்தளத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்.

db
use mydb

இப்போது நாம் இந்த mydb தரவுத்தளத்தில் i மற்றும் j என்ற இரண்டு ஆவணங்களை உள்ளீடு செய்ய உள்ளோம், அதற்க்கான கட்டளை:

j = { name : "mongo" }
k = { x : 3 }
db.testData.insert( j )
db.testData.insert( k )

இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது mydb என்ற தரவுத்தளமும், testData என்ற தொகுப்பும் உருவாக்கப்பட்டு பின்பு அதில் இந்த ஆவணங்களும் உள்ளீடாகும்.