புதன்
Appearance
புதன் என்றால் என்ன?
[தொகு]புதன் (ஆங்கிலத்தில் Mercury) சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள கோளாகும். இது ஒரு உட்கோளாகும், அதாவது இது பூமியைப் போலவே பாறைகளினாலான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. இது வாயுக்களை கொண்டிருக்கும் வளிமண்டலத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆகவே இங்கே காலநிலை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. நீண்டகாலத்த்க்கு முன், மரீனர் 10 எனும் விண்கலமே புதனுக்குச் சென்றுள்ளது. அதன் பின் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் மெசஞ்சர் எனும் விண்கலம் இருமுறை சென்றுள்ளது. இது புதன் 2011 இலேயே சுற்ற ஆரம்பித்துள்ளது.