எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/பாதுகாப்புச் செயற்பாடுகள்

விக்கிநூல்கள் இலிருந்து

பல்வேறு அழிவாபத்துக்களில் இருந்து எண்ணிமப் பொருட்களை பேணுவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே பாதுகாப்பு (preservation) எனப்படுகின்றது. இது பல்வேறு முறைமைகளை (methodologies), சீர்தரங்களை (standards), நுட்பங்களைக் கொண்ட செயற்பாடுகளை உள்ளடக்கியது.[4] எனினும் அடிப்படையான செயற்பாடுகளாக பின்வருவனவற்றை நோக்கலாம்:

  • காப்புப்படி எடுத்தல் - backup (அதிக படிகள் பொருட்களைப் பாதுகாக்கும். LOCKSS - "Lots of Copies Keep Stuff Safe")
  • கோப்பு முழுமைப்பாடு சரிபார்ப்பு - file integrity verification (சரிபார்தொகை/Checksum கணக்கிடலும் கண்காணித்தலும்)
  • கோப்பு வடிவ செம்மையாக்கம் - file format normalization
  • நுட்ப நகர்வு - technology migration (எ.கா ஒரு கோப்பு வடிவத்தில் இருந்து இன்னொன்றுக்கு)
  • Emulation
  • சூழல் பேணல் - environment preservation
  • எண்ணிம தடயவியல் - digital forensics
  • எண்ணிம தொல்பொருளியல் - digital archaeology