8-வது திருமொழி - இந்திரனோடு
Appearance
--வெ.ராமன் 07:48, 14 பெப்ரவரி 2006 (UTC)
திருவந்திக்காப்பிடல்
[தொகு]அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்* மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் உவந்து நின்றார்* சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்!* அந்தியம் போதுஇது வாகும் அழகனே!காப்பிட வாராய். (1)
கன்றுகள் இல்லம் புகுந்து கதறு கின்றபசு வெல்லாம்* நின்றொழிந்தேன்உன்னைக் கூவி நேச மேலொன்று மிலாதாய்!* மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!* நன்றுகண்டாய் என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய். (2)
செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும்சிதைத் திட்டு* அப்போது நானு ரப்பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்!* முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!* இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிட வாராய். (3)
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று* எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார்* கண்ணனே!வெள்ளறை நின்றாய்! கண்டா ரோடே தீமை செய்வாய்!* வண்ணமே வேலைய தொப்பாய்! வள்ளலே! காப்பிட வாராய். (4)
பல்லா யிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்* எல்லாம் உன்மேலன்றிப் போகாது எம்பிரான்! நீஇங்கே வாராய்* நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச் சுடரே! உன்மேனி* சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய். (5)
கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை* வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும் உண்டு* மஞ்சுதவழ் மணிமாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்!* அஞ்சுவன் நீஅங்கு நிற்க அழகனே! காப்பிட வாராய். (6)
கள்ளச் சகடும் மருதும் கலக்கழியஉதைசெய்த* பிள்ளை யரசே!நீபேயைப் பிடித்து முலையுண்ட பின்னை* உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்!* பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே! காப்பிட வாராய். (7)
இன்ப மதனை உயர்த்தாய்! இமையவர்க்கு என்றும் அரியாய்!* கும்பக் களிறட்ட கோவே! கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* செம்பொன்மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர்பிள்ளாய்!* கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய். (8)
இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறையோர் வந்து நின்றார்* தருக்கேல் நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்* திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்* உருக்காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.(9)
போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறையானை* மாதர்க்குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்* வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை* பாதப்பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினைபோமே. (10)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்