அண்ட்ராய்டு அப்ப்ஸ் செய்யலாம் வாங்க

விக்கிநூல்கள் இலிருந்து

அண்ட்ராய்டு அலைபேசியைப் பெரும்பாலும் அனைவரும் உபயோகித்திருப்போம் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தியதையாவது பார்த்திருப்போம். அதில் நாம் பயன்படுத்தும் ஒலிக்கடிகை, விளையாட்டுகள் முதற்கொண்டு இணைய உலாவி வரை அனைத்தும் அண்ட்ராய்டு செயலிகள் ஆகும். நீங்கள் கைபேசி உபயோகப்படுத்தும்போது சில செயலிகள் அவ்வாறு இல்லாமல் இப்படி இருந்திருந்தால் உபயோகிக்க அதை விட நன்றாக இருக்குமே என்று நினைத்துதிருப்பீர்கள். சரி! உங்களிடம் யோசனை உள்ளது. பிறகு, என்ன தயக்கம் உங்களுக்கு? தேவையானதை நீங்களே உருவாக்க வேண்டியது தானே. இதை உருவாக்க பட்ட படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு இணையதளம் வசதியுள்ள ஒரு கணினியும் ஆர்வமும் இருந்தால் போதும், ஒரு வாரத்தில் இதைக் கற்றுக்கொள்ளலாம்.

எம்ஐடி அப்ப் இன்வெண்டர்(MIT APP INVENTOR).