இங்சுகேப்பு/அறிமுகம்
இங்சுகேப்பு (Inkscape) என்பது கட்டற்ற வரைகலை மென்பொருள் ஆகும். எனவே, இதனைப் பயன்படுத்தவும், மற்றவருக்கு இதன் நகலைப் பகிரவும், வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், இதனைக் கொண்டு பணம் சம்பாதிக்கவும், இது சட்டபடியான அனைத்து உரிமைகளையும் தருகிறது.[1] இது 'கோரல்டிரா, அடோபி இல்லட்ரேட்டர் போன்ற பணம் செலுத்த வேண்டியத் தனியுடைமை மென்பொருள்களுக்கு மாற்றாக உள்ளது.
தமிழ் விக்கிமீடியாவிலும், பிற மொழி விக்கிமீடியத் திட்டங்களிலும், இதன் வழி வரைப்படங்கள், பொதுவகத்தில் உருவாக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. எனவே, அவை குறித்த அடிநிலைப் பாடங்களும், அறிமுகங்களும், இத்திட்டத்தில் பங்களிக்கும் ஒருவருக்கு, அடிப்படையாகத் தேவைப்படுகிறது.
இந்த திசையன் கோப்புகளை உருவாக்க நாம் கட்டற்ற மென்பொருளான 'இங்சுகேப்பு' என்பதைப் பயன்படுத்தப் போகிறோம். வரைகலையைக் கற்ற பலர் கூறுவது யாதெனில், இதன் பயன்பாட்டை, நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டால், இதன் மேன்மைத் தெளிவாகும். எனவே, பணச் செலவைக் குறைக்கவும், இந்த விலையில்லா, திறன் மிகுந்த கட்டற்ற மென்பொருளைக் கற்போம். எதைக் கற்கத் தொடங்கினாலும், முதலில் புரியாது; பின்பு ஓரளவு புரியும்; இறுதியாக அதில் சிறக்க இயலும் என்பதை மறவாது கற்கத் தொடங்குவோம்.
பதிவிறக்குதல் நிறுவுதல்
[தொகு]பொதுவாக இங்சுகேப்பை பதிவிறக்க இந்த இணையத்தளக்கு செல்லாவும்.
லினக்சு
[தொகு]- லினக்சு மென்பொருள் மையம் வழியாக நிறுவுதல்
- லினக்சு முனையத்தை விட எளிமையான வழி மின்பொருள் மையம் வழியாக நிறுவுதல் ஆகும். பெரும்பாலான லினக்சு மென்பொருள் மையங்களில் இங்சுகேப்பு உள்ளது ஆதலால் நீங்கள் அது வழியாக கூட நிறுவிக்கொள்ளலாம்.
- முனையம் வழியாக நிறுவுதல்
- உங்கள் லினக்சு முனையத்தை திறந்து, பின்னர் இங்சுகேப்பு நிறுவும் கட்டளையை இடுங்கள் கட்டளை:
sudo apt install inkscape
உங்கள் லினக்சு கணினி கடவுச்சொலை (password) இருங்கள். இங்சுகேப்பை நிறுவ உறுதி செய்யy
என்னும் கட்டளையை இடுங்கள். இது எவ்வளவு நேரத்தில் நிறுவப்படும் என்பது உங்கள் இணையவேகம் பொறுத்து.
- உங்கள் லினக்சு முனையத்தை திறந்து, பின்னர் இங்சுகேப்பு நிறுவும் கட்டளையை இடுங்கள் கட்டளை:
விண்டோசு
[தொகு]இணையத்தளம் மூலம் நிறுவிக்கொள்ளலாம் அல்லது மைக்குரோசாட்டு மின்பொருள் மையம் (Microsoft Store) நிறுவலாம்.
படக்கோப்பு வகைகள்
[தொகு]இருவிதமான படக்கோப்பு வடிவ முறைமைகள், இணையக் கணினிகளில் பயன்படுத்தப் படுகின்றன.
- விரியும் தன்மை அற்ற படங்கள் (raster): குறிப்பிட்ட அளவே பெரிது படுத்த இயலும். உரைக்கோப்புகளாகவம், சிறிய அளவிலும் உருவாவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .png, .jpeg, .jpg, .gif என முடியும்
-
png
-
jpeg
-
jpg
-
gif
- விரியும் தன்மை உள்ள படங்கள் (vector): திசையன் படங்கள் = பெரிதாக்கலாம்;கணக்கியல் உரைக்கோப்புகளாக (XML)உருவாகின்றன. சிறிய கோப்பாக இருந்தாலும், தரம் குறைவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .svg என முடியும்
-
svg
-
svg
-
svg