இங்சுகேப்பு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
இங்சுகேப்பு மென்பொருளின் அலுவலக இலச்சினை

இங்சுகேப்பு (Inkscape) என்பது கட்டற்ற வரைகலை மென்பொருள் ஆகும். எனவே, இதனைப் பயன்படுத்தவும், மற்றவருக்கு இதன் நகலைப் பகிரவும், வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், இதனைக் கொண்டு பணம் சம்பாதிக்கவும், இது சட்டபடியான அனைத்து உரிமைகளையும் தருகிறது.[1]

பல வரைகலைத் தொழில் நடத்துபவர், இது குறித்த பயற்சி அளிக்கும் நிறுவனங்கள், பல கல்விச்சாலைகள், வணிக மென்பொருள்களில் ஒன்றான 'கோரல்டிரா'(CorelDRAW) போன்றவற்றிற்கு, ஒவ்வொரு சில வருடங்களுக்கும், இதற்குரிய பயன்பாட்டுக் கட்டணத்தை, அம்மென்பொருள் உருவாக்கிப் பராமரிக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அவர்களும், பணத்தை மீதமாக்கும் நோக்கில், இங்சுகேப்பைக் கற்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் விக்கிமீடியாவிலும், பிற மொழி விக்கிமீடியத் திட்டங்களிலும், இதன் வழி வரைப்படங்கள், பொதுவகத்தில் உருவாக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. எனவே, அவை குறித்த அடிநிலைப் பாடங்களும், அறிமுகங்களும், இத்திட்டத்தில் பங்களிக்கும் ஒருவருக்கு, அடிப்படையாகத் தேவைப்படுகிறது. அந்த வகையில் நான் கற்ற, கற்க விரும்புகிற நுட்பங்களையும், வழிமுறைகளையும், இந்நூலில் தொகுத்து அளிக்கிறேன்.

எனவே, இது வரைகலைப் பயிலும் யாவருக்குமானத் தொடக்க நிலை நூலாக அமைய வேண்டும் என்பதனை, முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதத் தொடங்குகிறேன். இது பல்லூடகங்களைக் கொண்டு, அருகில் அமர்ந்து ஒருவர் சொல்லிக் கொடுப்பது போன்ற நடையில் உருவாக்கப் படுகிறது. பலரும் பயன் கொள்ள, இதனை மேம்படுத்த வாருங்கள். உங்கள் எண்ணங்களை மேலுள்ள உரையாடல் தத்தலுக்குள் சென்று எழுதுங்கள்,

இங்சுகேப்பு பதிவிறக்க மற்றும் நிறுவ[தொகு]

பொதுவக[தொகு]

இங்சுகேப்பை பதிவிறக்க இந்த இணையத்தளக்கு செல்லாவும்

லினக்சு[தொகு]

விண்டோசு (Windows)[தொகு]

இங்சுகேப்பை பதிவிறக்க இந்த இணையத்தளக்கு செல்லாம் அல்லது மைக்குரோசாட்டு மின்பொருள் மையம் (Microsoft Store) நிறுவலாம்

மாக் (Mac)[தொகு]

இங்சுகேப்பை பதிவிறக்க இந்த இணையத்தளக்கு செல்லாவும்

அறிமுகம்[தொகு]

விக்கிப்பீடியாவில்
இத்தலைப்பில் கட்டுரை உள்ளது:

படக்கோப்பு வகைகள்[தொகு]

.png Vs .svg அடிப்படையான வேறுபாடுகளை அறிக

இருவிதமான படக்கோப்பு வடிவ முறைமைகள், இணையக் கணினிகளில் பயன்படுத்தப் படுகின்றன.

  • விரியும் தன்மை அற்ற படங்கள் (raster): குறிப்பிட்ட அளவே பெரிது படுத்த இயலும். உரைக்கோப்புகளாகவம், சிறிய அளவிலும் உருவாவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .png, .jpeg, .jpg, .gif என முடியும்
  • விரியும் தன்மை உள்ள படங்கள் (vector): திசையன் படங்கள் = பெரிதாக்கலாம்;கணக்கியல் உரைக்கோப்புகளாக (XML)உருவாகின்றன. சிறிய கோப்பாக இருந்தாலும், தரம் குறைவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .svg என முடியும்

இந்த திசையன் கோப்புகளை உருவாக்க நாம் கட்டற்ற மென்பொருளான 'இங்சுகேப்பு' என்பதைப் பயன்படுத்தப் போகிறோம். வரைகலையைக் கற்ற பலர் கூறுவது யாதெனில், இதன் பயன்பாட்டை, நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டால், இதன் மேன்மைத் தெளிவாகும். எனவே, பணச் செலவைக் குறைக்கவும், இந்த விலையில்லா, திறன் மிகுந்த கட்டற்ற மென்பொருளைக் கற்போம். எதைக் கற்கத் தொடங்கினாலும், முதலில் புரியாது; பின்பு ஓரளவு புரியும்; இறுதியாக அதில் சிறக்க இயலும் என்பதை மறவாது கற்கத் தொடங்குவோம்.

நிகழ்பட விளக்கங்கள்[தொகு]

நிகழ்படங்கள்[தொகு]

1 பதிப்பு[தொகு]

நாம் பயன்படுத்தப் போகும் இங்சுகேப்பு (Inkscape) மென்பொருள் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பல கணினி வல்லுனர்களால் மேம்படுத்தப்பட்டு வளர்ந்து வருகிறது. எனவே, நாம் அதன் பதிப்பை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே புதிய பதிப்பில் வரும் வேறுபாடுகளை உணர்ந்து, தெளிவுற அறிந்து கொள்ள இயலும். எனவே, அதனை அறிந்து கொள்ள, நிகழ்படத்தைக் காணவும். அடுத்து வரும் பதிப்புக் குறித்தத் தேதியை, இங்சுகேப்பு இணையம் பின்வருமாறு அட்டவணைப் படுத்தியுள்ளது.

2 இடைமுக மொழி[தொகு]

இதன் இடைமுக மொழியானது தமிழில் உள்ளது. ஆனால், மேம்படுத்த வேண்டியுள்ளது. இப்பகுதியில் அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

3 தோற்றம்[தொகு]

இந்த நிகழ்பட பாடத்தில், இம்மென்பொருளின் இயல்பிருப்பானத் தோற்றத்தினையும், இம்மென்பொருளின் பொத்தான்/ஆழிகளைச் சொடுக்குவதன் மூலம் தோன்றும் மாற்றங்களையும், அதோடு விசைப்பலகையையும், திரைச்சுட்டியையும் இயக்குவதன் மூலம் பெறப்படும், தோற்ற மாற்றங்களையும் காணலாம்.

4 வரைப்பட தாள்[தொகு]

இதில் படம் ஒன்றினை, வரைத்தாள் அல்லது வரைப்பட தாளில் வரைந்து சேமிக்கப்படுவதும், பின்பு அதனை உலாவியில் பார்க்கும் போதும், இம்மென்பொருளிலேயே பார்க்கும் போதும் ஏற்படும் வேறுபாடு விளக்கப்படுகிறது.

5 வரைத்தாள் பின்புல நிறம்[தொகு]

வரைத்தாளின் இயல்பிருப்பான நிறம் வெள்ளையாகும். அது சற்று நிறம் மாற்றி வைப்பதன் மூலம், நமக்கு நன்மையுண்டு. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற வட்டம் இடும் போது, வரைத்தாளின் நிறமும் வெண்மையாக இருந்தால் வேறுபாடு தெரியாது. மேலும் சில சூழலில் வெற்று பக்கங்களை நீக்குவதற்கும் இந்த பின்புல நிறத்தை மாற்றுவதைத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.எனவே, இந்த நிகழ்படம் விளக்குகிறது.

உருவக் கருவிகள்[தொகு]

நீள் சதுரக்க கருவி[தொகு]

இங்சுகேப் சதுரக்க கருவி (ப.0.91)

குறுக்குவிசை : R அல்லது F4

இந்த கருவின் மூலம் சதுரம் மற்றும் நீள் சதுரம் உருவக்க முடியும்.

பயனக குறுக்குவிசைகள்[தொகு]

எண் குறுக்குவிசைகள் பயன்கள் குறிப்பு
1 தட்டச்சுப் பலகையிலுள்ள இந்த இருவிசைகளை அழுத்துவதினால், ஒரு திறந்துள்ள ஆவணத்தின் உள்ளே உள்ள அனைத்தும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட தரவு மீது, அடுத்த செயலைச் செய்தால், அது அத்தரவு முழுவதும் செயற்படும்.
2 நகல்
3 வெட்டுதல்
4 வெட்டுதல் அல்லது நகல் எடுத்துத் ஓட்டதல்
5
6
7
8
9 100px
10
11
12
13
14 100px
15 100px
16 100px
17 100px
18 100px
19 100px

மேற்கோள்கள்[தொகு]

  1. இங்சுகேப்பு இணையதள அறிவிப்புப் பக்கம்

வார்ப்புரு:Reflist


உயவுத்துணைகள்[தொகு]

  1. https://commons.wikimedia.org/wiki/Help:SVG
  2. ஆங்கில விக்கிக்கட்டுரைகள்
  3. 'யூடிப்' நிகழ்படங்கள்
  4. ஜெ. வீரநாதன் எழுதிய கட்டற்ற மென்பொருள் இங்க்ஸ்கேப் Inkscape 0.92.2 என்ற நூல்
  5. https://meta.wikimedia.org/wiki/Wikigraphists_Bootcamp_(2018_India)

ஒப்பிட்டறிக[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=இங்சுகேப்பு&oldid=17541" இருந்து மீள்விக்கப்பட்டது