இங்சுகேப்பு/உருவக் கருவிகள்
நீள் சதுரக்க கருவி
[தொகு]

குறுக்குவிசை : R அல்லது F4
இந்த கருவின் மூலம் சதுரம் மற்றும் நீள் சதுரம் உருவக்க முடியும்.
Ctrl எனும் விசையை அழுத்தி சதுரத்தை வரையும்போது முழு எண் விகிதத்தில் (integer-ratio எ.கா. 2:1, 3:1) சதுரமானது உருவாகும். ⇧ Shift அழுத்தி வரையும்போது நாம் சதுரத்தை வரையும் புள்ளியிலிருந்து நடுவாக சதுரம் உருவாகும். அதேபோன்று Ctrl+⇧ Shift அழுத்தி வரையும்போது முழு எண் விகிதத்திலும் வரையும் புள்ளியிலிருந்து நடுவாக சதுரம் உருவாகும்.
சதுர நான்கு மூலைகளை வட்டமாக்க விருப்பப்பட்டால் முதலில் சதுரத்தை தெரிவு செய்யவும் வலது-மேல் மூலையில் உள்ள சிறு வட்டத்தை (⭘) நகர்த்துவதன் மூலம் சதுரத்தின் மூலைகளை வட்டமாக்கலாம். மூலைகளை வட்டமாக்கியதை மீண்டும் கூர்மையாக்க சிறு வட்டத்தை (⭘) நகர்த்துவதன் மூலம் மாற்றலாம் அல்லது கருவிக் கட்டுப்பாடுகள் பட்டியில் உள்ள
மீண்டும் கூர்மையாக்கவும் பொத்தானை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
3டி பெட்டிகள்
[தொகு]
குறுக்குவிசை : X அல்லது ⇧ Shift+F4
3டி பெட்டிகள் கருவி கிட்டத்தட்ட 3 பரிமாண வடிவத்தை உருவாக்க எளிதான வழியாகும். இங்சுகேப்பு ஓர் இரு பரிமாண x/y திசையன் தொகுப்பி, இதில் x அச்சுக்கு இடமில்லை.
ஒவ்வொரு பரிமாணத்திற்கும் இணையான அல்லது ஒன்றிணைக்கும் திருத்தக் கோடுகள் உள்ளது. இந்த திருத்தக் கோடுகள் வெவ்வேறு வண்ணங்களில் காட்டப்படுகின்றன, இதனால் பயனர்கள் ஒரு வரியிலிருந்து மற்றொரு வரியை வேறுபடுத்திக் கொள்ளலாம்:
- சிவப்பு கோடுகள் X திசையை (அகலம்) குறிக்கின்றன;
- நீல கோடுகள் Y திசையை (உயரம்) குறிக்கின்றன;
- மஞ்சள் கோடுகள் Z திசையை (ஆழம்) குறிக்கின்றன.
3டி பெட்டியின் ஒரு பக்கத்தை மட்டும் தேர்ந்தெடுக்க, Ctrl+சொடுக்கவும்.
நீள்வட்டங்கள்
[தொகு]
குறுக்குவிசை : E அல்லது F5
நீள்வட்டம், வட்டம் அல்லது வளைவை வரைய, நீள்வட்ட கருவியைத் தேர்ந்தெடுத்து, மேல் இடமிருந்து கீழ் வலதுபுறமாக இழுத்தால் உருவாகும். ⇧ Shift அழுத்தி வரையும்போது நாம் வட்டத்தை வரையும் புள்ளியிலிருந்து நடுவாக வட்டம் உருவாகும். அதேபோன்று Ctrl+⇧ Shift அழுத்தி வரையும்போது முழு எண் விகிதத்திலும் வரையும் புள்ளியிலிருந்து நடுவாக வட்டம் உருவாகும்.
நீள்வட்டக் கருவியில் மொத்தம் நான்கு கைப்பிடிகள் உள்ளன: இரண்டு சதுர கைப்பிடிகள் அளவு மற்றும் விகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றன; இரண்டு வட்டக் கைப்பிடிகள் பரிதியின் கோணத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சதுரம் அல்லது வட்டக் கைப்பிடிகளில் ஒன்றில் உங்கள் சுட்டியை 🖰 மேலே வைத்தால் கீழ் நடுவிலுள்ள நிலைக்கடப் பட்டையில் (Statusbar) நீள்வட்ட கைப்பிடியின் கிடைக்கக்கூடிய திருத்தங்கள் மற்றும் Ctrl, ⇧ Shift, Alt விசைத் திருத்தங்கள் (கிடைத்தால்) புதுப்பிக்கப்பட்டுச் செய்தி காண்பிக்கும்.
வட்டக் கைப்பிடிகளை நீள்வட்டத்திற்கு வெளியே இழுத்தால் நீள்வட்டம் பிரியும் இது (வட்ட விளக்கப்படம்) போன்று உருவாக்குகிறது ; அவற்றை உள்ளே இழுப்பது ஒரு வளைவை உருவாக்குகிறது. நீள்வட்டத்தை முழுவதுமாக மூட, வட்டக் கைப்பிடிகளில் ஒன்றை Alt+சொடுக்கவும்.
நட்சத்திரங்கள் மற்றும் பலகோணங்கள்
[தொகு]
குறுக்குவிசை : * அல்லது ⇧ Shift+F9
நட்சத்திரங்கள் மற்றும் பலகோணங்களை உருவாக்குவதற்கான கருவி ஒன்றுதான் என்பதால் இடையே மாற இக்கருவியைச் சொடுக்கி மேல் உள்ள கருவிக் கட்டுப்பாடுகள் பட்டியில் இரண்டு சின்னங்களில் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்து வரைய வேண்டும்.
நட்சத்திர கருவியில் இரண்டு கைப்பிடிகள் உள்ளன, ஒரு கைப்பிடி முனை ( ⃟ ) நட்சத்திர முனைகளை தகவுப்பாடுத்தப் பயன்படுகிறது; இன்னொரு கைப்பிடி முனை ( ⃟ ) அடிப்படை ஆரத்தை (radius) பெரிதாக்கவும் சுருக்கவும் பயன்படுகிறது. நட்சத்திரத்தை சுழற்றாமல் முனையை நீட்டிக்க கைப்பிடியை Ctrl+இழுக்கவும், இரண்டு கைப்பிடிகளின் விகிதத்தை வளைக்காமல் மாற்ற அடிப்படை ஆர கைப்பிடியை Ctrl+இழுக்கவும்.
பலகோணக் கருவியில் ஒரு வடிவ கைப்பிடி மட்டுமே உள்ளது, இது பெரிதாக்கவும் சிறிதாக்கவும் சுழற்றவும் பயன்படுகிறது. பலகோணத்தை சுழற்றாமல் அளவை மாற்ற, முனை கைப்பிடியை Ctrl+இழுக்கவும்.
சுருள்கள்
[தொகு]
குறுக்குவிசை : I அல்லது F9
சுருள் கருவியில் வெளிப்பக்க கைப்பிடி மற்றும் உட்பக்க கைப்பிடி என இரண்டு வடிவ கைப்பிடிகளைக் கொண்டுள்ளது. கைப்பிடிகளை இழுப்பது சுருளை நீளமாகவும் சுருக்கமாகவும் பயன்படுகிறது.