உள்ளடக்கத்துக்குச் செல்

இங்சுகேப்பு/நிகழ்படங்கள்

விக்கிநூல்கள் இலிருந்து
1 பதிப்பு

நாம் பயன்படுத்தப் போகும் இங்சுகேப்பு (Inkscape) மென்பொருள் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பல கணினி வல்லுனர்களால் மேம்படுத்தப்பட்டு வளர்ந்து வருகிறது. எனவே, நாம் அதன் பதிப்பை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே புதிய பதிப்பில் வரும் வேறுபாடுகளை உணர்ந்து, தெளிவுற அறிந்து கொள்ள இயலும். எனவே, அதனை அறிந்து கொள்ள, நிகழ்படத்தைக் காணவும். அடுத்து வரும் பதிப்புக் குறித்தத் தேதியை, இங்சுகேப்பு இணையம் பின்வருமாறு அட்டவணைப் படுத்தியுள்ளது.

2 இடைமுக மொழி

இதன் இடைமுக மொழியானது தமிழில் உள்ளது. ஆனால், மேம்படுத்த வேண்டியுள்ளது. இப்பகுதியில் அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

3 தோற்றம்

இந்த நிகழ்பட பாடத்தில், இம்மென்பொருளின் இயல்பிருப்பானத் தோற்றத்தினையும், இம்மென்பொருளின் பொத்தான்/ஆழிகளைச் சொடுக்குவதன் மூலம் தோன்றும் மாற்றங்களையும், அதோடு விசைப்பலகையையும், திரைச்சுட்டியையும் இயக்குவதன் மூலம் பெறப்படும், தோற்ற மாற்றங்களையும் காணலாம்.

4 வரைப்பட தாள்

இதில் படம் ஒன்றினை, வரைத்தாள் அல்லது வரைப்பட தாளில் வரைந்து சேமிக்கப்படுவதும், பின்பு அதனை உலாவியில் பார்க்கும் போதும், இம்மென்பொருளிலேயே பார்க்கும் போதும் ஏற்படும் வேறுபாடு விளக்கப்படுகிறது.

5 வரைத்தாள் பின்புல நிறம்

வரைத்தாளின் இயல்பிருப்பான நிறம் வெள்ளையாகும். அது சற்று நிறம் மாற்றி வைப்பதன் மூலம், நமக்கு நன்மையுண்டு. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற வட்டம் இடும் போது, வரைத்தாளின் நிறமும் வெண்மையாக இருந்தால் வேறுபாடு தெரியாது. மேலும் சில சூழலில் வெற்று பக்கங்களை நீக்குவதற்கும் இந்த பின்புல நிறத்தை மாற்றுவதைத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.எனவே, இந்த நிகழ்படம் விளக்குகிறது.