உள்ளடக்கத்துக்குச் செல்

சமையல் நூல்/இட்லி

விக்கிநூல்கள் இலிருந்து
(இட்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமையல்புத்தகம் | குறிப்புகள்

விக்கிப்பீடியாவில்
இத்தலைப்பில் கட்டுரை உள்ளது:


இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லியின் துணை உணவுகள்

[தொகு]

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
இட்லி
இட்லி

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.

வகைகள்

[தொகு]

இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:

  • செட்டிநாடு இட்லி
  • மங்களூர் இட்லி
  • காஞ்சிபுரம் இட்லி
  • ரவா இட்லி
  • சவ்வரிசி இட்லி
  • சேமியா இட்லி
  • சாம்பார் இட்லி
  • குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.

செய்முறை

[தொகு]
தேவையான பொருட்கள் :
அளவு
புழுங்கல் அரிசி 400 கிராம்
உளுத்தம் பருப்பு 100 கிராம்
உப்பு தேவையான அளவு
  • ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
  • அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
  • அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
  • இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
  • புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

இட்லிச் சட்டி

[தொகு]
இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.

இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்/இட்லி&oldid=17547" இலிருந்து மீள்விக்கப்பட்டது