எக்சு.எம்.எல் நுட்பங்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொருளுனர் வலை (semantic web) இணையத்தின் அல்லது உலகளாவிய வலையின் அடுத்த கட்டமாக கூறப்படுகிறது. அடிப்படையில் பொருளுணர் வலை என்றால், வலையில் கிடைக்கும் தரவுகள் அல்லது தகவல்களை கணினிகள் பொருள் புரிந்துகொள்ளத்தக்கவாறு ஒழுங்குபடுத்தும் நுட்பம் ஆகும். தற்போது ஒரு வலைப்பக்கத்தில் உள்ள தரவுகள் அல்லது தகவல்கள் எந்த வகையான சீர்தரப்பட்ட கட்டமைப்புக்குள் இருப்பதில்லை. இதனால் இந்த தரவுகள் மீது கணித்தல் செய்வது சிரமானது. இந்தத் தகவல்கள் முறையான ஒரு கட்டமைப்புக்குள் வந்தால், பல்வேறு வகையான தேவைகளுக்கு, கணித்தலுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும். அத்தகைய முறைமைகளையே பொருளுணர் வலை சுட்டுகிறது. இவ்வாறு தரவுகளை படிநிலையாக ஒழுங்குபடுத்திக் கட்டமைத்து, அவற்றின் மீது செயற்பாடுகளை மேற்கொள்ள உதபுவையே எக்சு.எம்.எல் (XML) தொழில்நுட்பங்கள். இந்த நூல் எக்சு.எம்.எல் தொழில்நுட்பங்களை ஒரு பொது வாசகனுக்கும், நிரலாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வண்ணம் எழுதப்படுகிறது.

பொருளடக்கம்[தொகு]

  • பயன்பாடுகள்
  • வலைச் சேவை
  • XMLHttpRequest
  • எக்சு.எம்.எல் அடிப்படைச் சீரதரங்கள்