எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/பாதுகாப்புச் செயற்பாடுகள்/நிலைப்பு
Appearance
ஒரு படைப்பினை ஆவணகப்படுத்தும் போது அந்தப் படைப்புத் தொடர்பான கோப்புக்கள் மாறாமல் இருப்பதை நிலைப்பு அல்லது அசைவின்மை (Fixity) எனபடுகிறது. ஒரு படைப்புத் தொடர்பான கோப்புக்கள் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்க்காத நிகழ்வுகளால் பழுதடையக் கூடும். எ.கா ஒருவர் தவறுதலாக பாகங்களை நீக்கிவிடலாம். கணினியில் நச்சுநிரல் பரவி கோப்புக்களை பாதித்து இருக்கலாம். எனவே கோப்புக்களின் முழுமையைப்பாட்டை, நிலைப்பை உறுதிசெய்வது எண்ணிமப் பாதுகாப்பின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும்.
ஒரு கோப்பின் நிலைப்பினை அதன் சரிபார்தொகையைக் (checksum) கணித்துக் கண்காணிப்பதன் மூலம் உறுதிசெய்யலாம்.