குடும்பம்
குடும்பம்[தொகு]
ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர்.
குடும்பத்தில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபடும்.
குடும்பத்தின் வகை[தொகு]
என இருவகைப்படும்
-
தனிக் குடும்பம்
-
தனிக் குடும்பம்
-
கூட்டுக் குடும்பம்
தனிக் குடும்பம்[தொகு]
தாய், தந்தை, குழந்தைகள் மட்டும் சேர்ந்து வாழ்வது தனிக் குடும்பம்
தனிக் குடும்பத்தை சிறிய குடும்பம், பெரிய குடும்பம்
எனப் பிரிக்கலாம்.
சிறிய குடும்பம்
தாய், தந்தை, இரு குழந்தைகள் மட்டும் சேர்ந்து வாழ்வது சிறிய குடும்பம்
என அழைக்கப்படுகிறது.
பெரிய குடும்பம்
தாய், தந்தை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் சேர்ந்து வாழ்வது பெரிய குடும்பம்
என அழைக்கப்படுகிறது.
கூட்டுக் குடும்பம்[தொகு]
தாய், தந்தை, அண்ணன், தம்பி, குழந்தைகளுடன் தாத்தா பாட்டி போன்ற உறவினர்களும் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பம்
குடும்பத்தின் உறுப்பினர்கள்[தொகு]

- அம்மா
- அப்பா
- அக்காள்
- அண்ணன்
- தங்கை
- தம்பி
- தாத்தா
- பாட்டி
- பெரியப்பா
- பெரியம்மாள்
- சித்தப்பா
- சித்தி (சின்னம்மாள்)
- மாமா
- அத்தை(மாமி)
பயிற்சி[தொகு]
அம்மா அல்லது அப்பாவிடம் பின்வரும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்.
- உன் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்.?
- நீ கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறாயா? தனிக் குடும்பத்தில் வசிக்கிறாயா?
- உன் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்.
- மாமா, மாமி என்பவர்கள் யார்?
- சித்தப்பா, சித்தி என்பவர்கள் யார்?